திருப்பத்தூர் மாவட்ட வரைபடத்தை தங்கத்தால் வடிவமைத்த தொழிலாளி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பத்தூர் மாவட்ட வரைபடத்தை தங்கத்தால் வடிவமைத்த தொழிலாளி

Added : ஜூலை 01, 2020
Share

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட வரை படத்தை, தங்கத்தால் வடிவமைத்த தொழிலாளி, கலெக்டரிடம் வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பத்தை சேர்ந்தவர் தேவன், 57. நகை தொழிலாளியான அவர் காந்தி, நேரு, இந்திரா போன்ற தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களின் உருவங்கள் மற்றும் பல்வேறு வரலாற்று சின்னங்களை தங்கத்தால் வடிவமைத்து, கின்னஸ் சாதனைக்காக பொது மக்கள் பார்வைக்கு வைத்து வருகிறார். இந்நிலையில், வேலூர் மாவட்டத்திலிருந்து, திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு அதற்கான வரைபடம் வெளியிடப்பட்டது. எனவே, திருப்பத்தூர் மாவட்ட வரைபடத்தை, 2 கிராம், 740 மில்லி தங்கத்தால் வடிவமைத்தார். அதை, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருளிடம் நேற்று வழங்கினார். 24 மணி நேரத்தில், தங்க வரை படத்தை வடிவமைத்ததாக தேவன் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X