நேபாள பிரதமர் பதவி விலக ஆளும் கட்சி போர்க்கொடி

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
nepal, nepal pm, Nepal Communist Party, Prime Minister K P Sharma Oli, நேபாளம், பிரதமர், பதவி,  வலியுறுத்தல்

காத்மாண்டு: நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலியை பதவி விலகுமாறு கூறி ஆளும் நேபாள கம்யூ., கட்சி தலைவர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

நேற்று (ஜூன் 30) நேபாள கம்யூ., கட்சியின் நிலைக் குழு கூட்டம் பலுவடாரில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதில் கே.பி. ஷர்மா ஒலி நேபாள முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: இரு தினங்களுக்கு முன் கே.பி.ஷர்மா தன்னை பதவியில் இருந்து நீக்க இந்தியா முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக துாதரக அலுவலகங்களிலும் ஓட்டல்களிலும் சொந்த கட்சியினரே சதியாலோசனை நடத்துவதாகவும் கூறியிருந்தார்.


latest tamil news


இது குறித்து பேசிய பிரசண்டா 'ஷர்மா ஒலியின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சு, இந்தியா உடனான உறவை சீர்குலைக்கும்' என எச்சரித்தார். மேலும் இந்தியா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் அளிக்குமாறு கோரினார். ஆனால் இக்கூட்டத்தில் பங்கேற்ற கே.பி.ஷர்மா ஒலி அது குறித்து எதுவும் கூறாமல் மவுனமாக இருந்தார். இதையடுத்து இந்தியா மீதான புகாருக்கு ஆதாரம் தர முடியவில்லையெனில் பதவி விலகுமாறு ஷர்மாவை பிரசண்டா கேட்டுக் கொண்டார்.

அதுபோல மூத்த தலைவர்கள் மாதவ் குமார் நேபாள் ஜலநாத் கனல் கட்சியின் துணை தலைவர் பம்தேவ் கவுதம் செய்தி தொடர்பாளர் நாராயண்கஜி ஷ்ரேஸ்தா ஆகியோரும் ஆதாரம் இல்லையெனில் ராஜினாமா செய்யுமாறு ஷர்மா ஒலியை வலியுறுத்தினர். இத்தகைய பரபரப்பான சூழலில் கூட்டம் முடிவடைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பரில் ஏற்பட்ட உடன்படிக்கைப்படி கட்சி தலைவர், பிரதமர் ஆகிய இரு பதவிகளில் ஒன்றை கே.பி.ஷர்மா ஒலி ராஜினாமா செய்து பிரசண்டா பதவியேற்க வழி விட வேண்டும். ஆனால் ஷர்மா பதவி விலக மறுத்து வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
01-ஜூலை-202019:17:49 IST Report Abuse
Sukumar Talpady நேபாளிகள் உண்மையானவர்கள். இந்தியா மீது அன்பும் பாசமும் கொண்டவர்கள். சூது வாது தெரியாதவர்கள். இந்திய ராணுவத்தில் அவர்களுக்கென்றே ஒரு brigade இருக்கிறது. ஆனால் அந்த நாட்டின் இப்போதைய பிரதமர் சீனாவின் பேச்சை கேட்டு இந்தியாவுக்கு எதிராக பேசுகிறார். நேபாளி மக்களை, அந்த தலைவர்கள் தான் குழப்புகிறார்கள். இந்திய ரகசியம் அவர்கள் மூலமாக சீனாவுக்கு தெரிய வரும் என்று நான் நம்ப வில்லை. ஆனால் சீனாவின் ஆங்கில பத்திரிகையான Global Times சொல்லுகிறது என்ன வென்றால், இந்தியா சீனா போர் மூண்டால், பாக்கிஸ்தான் மற்றும் நேபால் சீனாவுடன் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக போர் புரிவார்கள் என்று. அதுதான் கவலையாக இருக்கிறது. பாக்கிஸ்தான் தெரிந்த விஷயம் தான். ஆனால் நேபாள்? நேபாள் மக்கள் தங்களது எதிர்காலத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஜாக்கிரதை. இவ்வளவுதான் சொல்ல முடியும் .
Rate this:
Cancel
Mithun - Bengaluru,இந்தியா
01-ஜூலை-202016:11:02 IST Report Abuse
Mithun நேரு அறக்கட்டளைக்கு சீனா உதவியது போல் ஒலி அறக்கட்டளைக்கும் சீனா உதவியிருக்கும்.
Rate this:
Cancel
Rajan - Alloliya,இந்தியா
01-ஜூலை-202015:42:29 IST Report Abuse
Rajan மோடி அவர்களே தேசியம்னு பேசினா போதாது .நேபாளிகள், பாக்கி மற்றும் சீனாவின் ஒற்றர்கள் ,பாஸ்போர்ட் மற்றும் விசா கட்டாயமாக்கவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X