சீனாவில் மற்றொரு வைரஸ்? பன்றிகள் மூலம் பரவும் அபாயம்!

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

பீஜிங்: 'கொரோனா' வைரஸ் பரவலே அடங்காத நிலையில், பன்றிகள் மூலம் மற்றொரு வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக, ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

சீனாவில் உள்ள பன்றிகளிடம் இந்த வைரஸ் இருப்பதாகவும், அது மனிதர்களுக்கு பரவும் ஆபத்து உள்ளதாக, ஒரு ஆராய்ச்சி கட்டுரை தெரிவிக்கிறது.

மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடும் ஒரு இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:சீனாவில் உள்ள பன்றிகளை ஆய்வு செய்தபோது, அவற்றில், புதிதாக, ஜி - 4 என்ற வைரஸ் இருப்பது தெரியவந்தது. இது, 'புளூ' என்ற காய்ச்சலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. கடந்த, 2016ல் இருந்து, இந்த வைரஸ் பன்றிகளிடம் தென்பட்டு உள்ளது.பன்றி வளர்ப்போரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 10 சதவீதம் பேருக்கு, இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், அவர்களுக்கு, 20 சதவீதம் அளவுக்கே பாதிப்பு இருந்தது.

இதுவரை, இந்த வைரசால், இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த, 2016 மற்றும், 2019ல், 46 வயது மற்றும் 9 வயதுள்ள இருவருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.இதன் மூலம், பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுவதற்கு அதிக சாத்தியம் உள்ளது.அதே நேரத்தில், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு வேகமாக பரவும் நிலை உருவாகவில்லை. இந்த வைரஸ் மனிதர்களிடம் தங்க ஆரம்பித்து விட்டால், அது வளர்ச்சி அடைந்து, பாதிப்பை ஏற்படுத்தும்.மேலும், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவும் வாய்ப்பும் உள்ளது. அதனால், தொடர் கண்காணிப்பு தேவை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து நிபுணர்கள் கூறியுள்ளதாவது:பன்றிகளிடம் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது, ஐந்து ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டது. ஆனால், அது இதுவரை பரவவில்லை. அதனால், உடனடியாக வேகமாக பரவும் வாய்ப்பு ஏதும் இல்லை. இருப்பினும், இந்த வைரசை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X