டுவிட்டரில் டிக் டாக், ஹெலோவுக்கு வேடிக்கை அஞ்சலி!| RIP TikTok: Twitter flooded with memes, jokes | Dinamalar

டுவிட்டரில் 'டிக் டாக், ஹெலோ'வுக்கு வேடிக்கை அஞ்சலி!

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (3)
புதுடில்லி: தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, சீனாவின் 'டிக் டாக், ஹெலோ ஷேர்இட்' உள்பட, 59 செயலிகளுக்கு இந்திய அரசு நேற்று தடை விதித்தது. ஏற்கனவே, இந்திய அரசு தடை விதித்த, 'கேம் ஸ்கேனர், ஷேர் இட்' உள்ளிட்ட பல செயலிகள் இன்னும் 'ப்ளே ஸ்டோரில்' கிடைக்கின்றன. இச்சூழல், சமூக ஊடகமான 'டிக் டாக், ஹெலோ ஆப்'கள் முழுவதுமாக

புதுடில்லி: தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, சீனாவின் 'டிக் டாக், ஹெலோ ஷேர்இட்' உள்பட, 59 செயலிகளுக்கு இந்திய அரசு நேற்று தடை விதித்தது.latest tamil news
ஏற்கனவே, இந்திய அரசு தடை விதித்த, 'கேம் ஸ்கேனர், ஷேர் இட்' உள்ளிட்ட பல செயலிகள் இன்னும் 'ப்ளே ஸ்டோரில்' கிடைக்கின்றன. இச்சூழல், சமூக ஊடகமான 'டிக் டாக், ஹெலோ ஆப்'கள் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளன. ஆப் ஸ்டோர்களிலிருந்தும் அவை நீக்கப்பட்டுள்ளன.


latest tamil newsஆனால், டிக் டாக் மற்றும் ஹெலோ நிறுவனங்கள் தங்களது செயலிகளை முடக்க வேண்டாம் எனக் கோரி வருகின்றன. மேலும், 'தனிநபர் தரவுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் இந்திய சட்டங்களுக்கு இணைந்து தொடர்ந்து செயல்பட தயாராக உள்ளோம். இந்திய பயனாளர்களின் எந்த ஒரு தரவுகளையும் நாங்கள் சீனா உள்பட எந்த ஒரு நாட்டுடனும் பகிர்ந்து கொள்வது கிடையாது. கோரிக்கை வரும் பட்சத்தில் வரும் காலத்தில் இதே அணுகுமுறையை பின்பற்ற தயாராக இருக்கிறோம்' என்று டிக் டாக் கூறியதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின.இந்நிலையில், டிக் டாக்கிற்கு இளைஞர்கள் சமூக வலைதளமான டுவிட்டரில் வேடிக்கையாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். RipTiktokIndia என்ற ஹாஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இந்த ஹாஷ்டேகின் கீழ் ஏராளமான பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X