ஜோ பிடன் பிரசார கமிட்டியில் இந்திய பெண்ணுக்கு பதவி| Joe Biden names Indian-American expert as digital chief of staff | Dinamalar

ஜோ பிடன் பிரசார கமிட்டியில் இந்திய பெண்ணுக்கு பதவி

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (14)
Share
Joe Biden, President Election, America, Indian-American expert, ஜோ பிடன், மேதா ராஜ், அதிபர், தேர்தல், பிரசாரக்குழு, அமெரிக்கா

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடனின், 'டிஜிட்டல்' பிரசார கமிட்டி தலைவராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த மேதா ராஜ் என்ற பெண் நியமிக்கப்பட்டு உள்ளார்.


முக்கியத்துவம்


அமெரிக்க அதிபர் தேர்தல், இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். இந்நிலையில், ஜோ பிடன், தனக்கான டிஜிட்டல் பிரசார கமிட்டியை நியமித்துள்ளார். இதன் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேதா ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.


latest tamil newsகொரோனா பரவல் காரணமாக, தற்போதைய அமெரிக்க அதிபர் தேர்தலில், தலைவர்கள் நேரடி பிரசார கூட்டங்களில் பங்கேற்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால், 'வீடியோ கான்பரன்ஸ்' உள்ளிட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலமாக பிரசாரம் செய்வதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஜோ பிடன் டிஜிட்டல் பிரசார குழுவுக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


latest tamil news

ஆதரவு


மேதா ராஜ், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார். ஜார்ஜியா பல்கலை.,யில் சர்வதேச அரசியல் துறையில் பட்டம் பெற்றவர். ஸ்டான்போர்டு பல்கலை.,யில், எம்.பி.ஏ., பட்டமும் பெற்றுள்ளார். ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வு நடந்தபோது, போட்டியாளர்களில் ஒருவராக இருந்த பீட்டர்ஸ் புட்டிங்சின் பிரசார குழுவில் பணியாற்றியவர் மேதா ராஜ். இது குறித்து மேதா ராஜ் கூறுகையில், ''ஜோ பிடன் டிஜிட்டல் பிரசார கமிட்டி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்தலுக்கு, இன்னும், 130 நாட்களே உள்ளன. ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.

இதற்கிடையே, தேர்தலில் அதிபர் டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. 'டிரம்பின் அரசியல் நடவடிக்கை குழு' என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவுக்கு, ஏ.டி.அமர் என்பவர் தலைவராக உள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X