பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைனில் குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக மோசடி: எஸ்.பி., எச்சரிக்கை

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

நாமக்கல்: 'கொரோனா காலத்தில், நேர்முகத் தேர்வு இல்லாமல் வேலை வாங்கித் தருவதாகவும், ஆன்லைன் மூலம் குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும் கூறி முன் பணம் பெற்று ஏமாற்றும் மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என, நாமக்கல் எஸ்.பி., அருளரசு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், நேர்முகத் தேர்வு இல்லாமல், வேலை வாங்கித் தருவதாக, பொதுமக்களிடம் பணம் பெற்று சிலர் ஏமாற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், குறைந்த வட்டிக்கு, எவ்வித பிணையமும் இல்லாமல், வீடு கட்ட மற்றும் தனிநபர் கடனாக, லட்சக் கணக்கில் கடன் வழங்குவதாக மொபைல் போன் மூலம் ஆசை வார்த்தை கூறியும், வங்கிகளில் இருந்து மேலாளர் பேசுவதாகக் சொல்லி, ஏ.டி.எம்., கார்டு காலாவதியாவதை புதுப்பிப்பதற்காக, ரகசிய எண்ணை பெற்று, அதன் மூலம் வங்கிக் கணக்கில் இருந்து, பணத்தை பரிமாற்றம் செய்து ஏமாற்றி வருவதாகவும் தெரிய வருகிறது. பொதுவாக, எந்த வங்கியில் இருந்தும், வங்கிக்கடன் தருவதாக கூறி முன்பணம் கேட்க மாட்டார்கள். மேலும், ஏ.டி.எம்., கார்டு புதுப்பிப்பதற்காக, அதன் ரகசிய எண்ணையும் கேட்கமாட்டார்கள். அதேபோல், எந்தவொரு அரசு, தனியார் துறையிலும், வேலையில் அமர்த்துவதற்காக பணம் பெறுவது கிடையாது. மொபைல் போனில், வங்கி மேலாளர் அழைக்கிறார் என வரும் அனைத்து அழைப்புகளையும், உடனே தவிர்க்க வேண்டும். எக்காரணம் கொண்டும், மொபைல் அல்லது ஆன்லைன் மூலம் கடன் கொடுப்பதாக வரும் செய்திகளை நம்பக்கூடாது. மேலும், மொபைல் போன் டவர் அமைக்க, உங்கள் வீட்டு மாடி, காலியிடம், கூகுள் மேப் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், முன்பணம் மட்டும் கட்ட வேண்டும் எனக்கூறி ஏமாற்றும் கும்பலிடம், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X