நாமக்கல்லில் கபசுர குடிநீர் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல்லில் கபசுர குடிநீர் வழங்கல்

Added : ஜூலை 01, 2020
Share

நாமக்கல்: எர்ணாபுரம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவம் சார்பில் பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. நாமக்கல் அடுத்த, எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சித்த மருத்துவ பிரிவு, இந்தியன் ?ஹாமியோ கியூர் ?ஹல்த் கேர் இணைந்து, கணேசபுரத்தில், கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தின. சித்தமருத்துவர் பூபதி ராஜா தலைமை வகித்து, 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். மேலும், கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் ரபிக், ஹோமியோ கிளிப் ஹெல்த் கேர் நிறுவனர் கருப்புசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X