பொது செய்தி

தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

நாமக்கல்: எலந்தக்குட்டையில், உலக போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் மாவட்ட மன நலதிட்டத்தின் சார்பில், பள்ளிப்பாளையம் அடுத்த எலந்தக்குட்டை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தின நிகழ்ச்சி நடந்தது. அரசு மருத்துவர் யுவராஜ் தலைமை வகித்து பேசியதாவது: போதைப்பொருட்களை ஒருவர் தொடர்ந்தோ விட்டு விட்டோ பயன்படுத்தினால் அவரின் உடல் நிலையிலும், மன நிலையிலும் மாற்றம் ஏற்படும். மனிதர்களைத் தாக்கும் பல விதமான நோய்களில் மிகவும் மோசமான வியாதி போதை பொருட்களுக்கு அடிமையாவது. இதனால், மூளை, இதயம், கல்லீரல், கணையம், இரைப்பை, உணவுக்குடல், நுரையீரல், நரம்பு மண்டலம் ஆகிய எல்ல உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. மூளை பாதிப்படைவதால், பலவித மன நோய்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு, அவர் பேசினார். சித்த மருத்துவர் வெங்கடபிரகாசம், மனநல ஆலோசகர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X