தற்காலிக நகராட்சி அலுவலகம் பள்ளி வகுப்பறையில் அமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தற்காலிக நகராட்சி அலுவலகம் பள்ளி வகுப்பறையில் அமைப்பு

Added : ஜூலை 01, 2020
Share

நாமக்கல்: நாமக்கல் கோட்டை பள்ளி வகுப்பறையில், தற்காலிக நகராட்சி அலுவலகம் செயல்படுகிறது.
நாமக்கல், வாரச்சந்தையில் காய்கறி வியாபாரிகள் இருவருக்கு கொரோனா உறுதியானதால் அந்தச் சந்தை மூடப்பட்டது. இந்நிலையில், அதனருகே செயல்படும் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும், இரு பெண்கள், ஒரு ஆண் ஆகியோருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதியானதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, நகராட்சி அலுவலகமும் மூடப்பட்டது. அங்கு பணியில் உள்ள ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், 160 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வந்தால் தான் மற்ற ஊழியர்களுக்கும் தொற்று பரவல் உள்ளதா என்பது தெரியவரும். இந்நிலையில், இரு நாள்களுக்கு நகராட்சி அலுவலகம் செயல்பட நாமக்கல்-துறையூர் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு தனித்தனி அறைகள் இல்லாததால் கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. நேற்று காலை முதல், பள்ளி வகுப்பறைகளில் நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர்பாஷா, பொறியாளர் ராஜேந்திரன், துப்புரவு அலுவலர் சுகவனம் மற்றும் அதிகாரிகள் தங்கள் பணியை மேற்கொண்டனர். பொதுமக்கள் யாரும் இந்த தற்காலிக அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X