பொது செய்தி

தமிழ்நாடு

குடியிருப்பு பகுதி மக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதி முழுவதும் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என, உடலின் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில், 21 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் குடியிருப்புகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. குறிப்பாக ஆவாரங்காடு, ஜனதாநகர்,பெரியார்நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், மக்கள் நடமாட்டமும், நெருக்கடியும் இருக்கும். இதனால் பாதுகாப்பு கருதி, நகராட்சியின் குடியிருப்பு பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள், ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்களின் உடல்நிலை வெப்பநிலையை பரிசோதனை செய்தனர். இதில், காய்ச்சல் கண்டறியப்பட்டால், அரசு மருத்துவமனைக்கு தெரிவிக்கப்படவுள்ளது. தொடர்ந்து இப்பணி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X