பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் நகராட்சி, ஊராட்சி அலுவர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பள்ளிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்து வந்த எஸ்.ஐ., ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதை, தொடர்ந்து, கடந்த, 28 முதல் போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டு, அப்பகுதி முழுவதும் பொதுமக்கள் யாரும் செல்ல முடியாதபடி தடுப்பு அமைக்கப்பட்டு தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு பணிபுரியும் அனைத்து போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை நகராட்சி மண்டபத்தில் செய்யப்பட்டது. தொடர்ந்து, நேற்று நகராட்சி அலுவலர்களுக்கும் பரிசோதனை நடந்தது. அதேபோல், ஊராட்சி அலுவலக பணியாளர்கள், ஒன்றிய கவுன்சிலர் உள்பட மக்கள் பிரதநிதிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X