பொது செய்தி

தமிழ்நாடு

டேங்க் ஆப்பரேட்டரை நியமிக்க வேண்டும்: பஞ்., தலைவர் கூட்டமைப்பு கோரிக்கை

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

பரமத்தி: பரமத்தி ஒன்றியம், ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூடச்சேரி ஊராட்சி தலைவர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி அமைப்பில், மூன்றடுக்கு ஊராட்சி அமைப்பில், கிராம ஊராட்சிக்கான திட்ட செயல்பாடுகளில், ஊராட்சி தலைவர்களுக்கான அதிகாரத்தை, முழுமையாக செயல்படுத்த வேண்டும். கிராம ஊராட்சிகளில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், மிகக்குறைந்த அளவே, நிரந்த பணியில் உள்ளனர். சில ஊராட்சிகளில், அப்பணியிடம் காலியாக உள்ளது. அதனால், ஊராட்சியில் உள்ள அனைத்து குக்கிராமங்களிலும், சீராக குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், தேவையான டேங்க் ஆப்பரேட்டர்களை நியமித்துக் கொள்ள, வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம், கலெக்டருக்கு கோரிக்கை அனுப்புவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கூட்டமைப்பின் தலைவராக கூடச்சேரி ஊராட்சி தலைவர் சுப்ரமணியம், செயலாளராக செருக்கலை ராமசாமி, பொருளாளராக சுங்ககாரம்பட்டி பெரியசாமி, துணைத்தலைவராக மாணிக்கநத்தம் வேலுசாமி, துணை செயலாளராக பிராந்தகம் திலகமணி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X