சுகாதார நிலைய டிரைவர் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார நிலைய டிரைவர் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

Added : ஜூலை 01, 2020
Share

நாமக்கல்: அரசு ஆரம்ப சுகாதார நிலைய டிரைவர் உள்பட, மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில், ஏப்., 1 முதல், இதுவரை, 96 பேர், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், லாரி டிரைவர் ஒருவர் இறந்தார். இந்நிலையில், பள்ளிபாளையம் அடுத்த வெடியரசம்பாளைத்தை சேர்ந்த, 26 வயது வாலிபர், ஈரோடு பெருந்துறையில், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். ஊர் திரும்பியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையை சேர்ந்த, 39 வயது ஆண், அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அவர், கொரோனா பணியில், சென்னை சென்றுவிட்டு, ஊர் திரும்பினார். அவருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பொத்தனூரை சேர்ந்த, 29 வயது வாலிபர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். சென்னையில் இருந்து, சேலத்துக்கு விமானத்தில் வந்துள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில், தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதன் மூலம், மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 99ஆக அதிகரித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X