சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகளுக்கு மிரட்டல்: வி.சி., நிர்வாகி கைது

Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

வெண்ணந்தூர்: வெண்ணந்தூரில், அரசு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த வி.சி., கட்சியை சேர்ந்த நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றியம், மின்னக்கல் பஞ்., பொன்னாங்காடு பகுதியில், நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில், ஆறு கழிப்பிடங்கள் கட்டும் பணி தொடங்கியது. நேற்று முன்தினம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், வனிதா, ஒன்றியக்குழு துணைத்தலைவர் பெருமாள் உள்ளிட்ட ஆறு பேர், பணிகளை பார்வையிட வந்தனர். அப்போது, சமத்துவபுரத்தை சேர்ந்த ராஜா என்கிற அரசன், 45, வெண்ணந்தூர் தங்கசாலை வீதியை சேர்ந்த நடராஜன், ஆர். புதுப்பட்டியை சேர்ந்த பெரியசாமி, பொன்பரப்பிபட்டியை சேர்ந்த கணபதி ஆகியோர், ஊராட்சி அதிகாரிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். 'இப்பகுதியில், 10 கழிவறைகள் கட்ட வேண்டும்; இல்லையெனில், எங்களுக்கு பணம் தரவேண்டும்' என, மிரட்டியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, பஞ்., செயலாளர் ரத்தின சபாபதி, 51, வெண்ணந்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்த போலீசார், நான்கு பேர் மீதும் வழக்கு பதிந்து, அரசனை கைது செய்தனர். மற்ற, மூன்று பேரையும் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின், மாவட்ட பொருளாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
01-ஜூலை-202018:18:20 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அவர்களது தலைவன் மாதிரியே கட்டப் பஞ்சாயத்து வசூலுக்கு முட்டியைத் தட்டி குண்டர் சட்டத்தில் உள்ள தள்ளணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X