சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை

Added : ஜூலை 01, 2020
Share

கரூர்: நெரூர், சதாசிவ பிரம்மேந்திராள் கோவில் வளாகத்தில் உள்ள சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


கரூர் மாவட்டம், நெரூரில் சதாசிவபிரம்மேந்திராள் கோவில் பிரசித்த பெற்ற கோவிலாகும். இங்கு, பவுர்ணமி உட்பட முக்கிய நாட்களில் வெளி மாநிலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் அருகில் கழிப்பறை இருந்தபோது, போதுமான பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையில் உள்ளது. அவற்றை பயன்படுத்த முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர். அதிலும், வெளி மாநில பக்தர்கள் சிரமப்படுகின்றனர். உள்ளூர் பக்தர்கள் பொது இடங்களை கழிப்பறையாக பயன்படுத்துவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவால் கோவில்கள் திறக்க அனுமதி வழங்கவில்லை. எனவே, கோவில் வளாக பகுதியில் புதிய கழிப்பறை கட்ட வேண்டும் அல்லது பழைய கழிப்பறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X