பொது செய்தி

தமிழ்நாடு

வணிகர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்: எஸ்.பி., பாண்டியராஜன் பேச்சு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

கரூர்: ''ஊரடங்கு உத்தரவு காலத்தில் வணிகர்கள், போலீசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என, எஸ்.பி., பாண்டியராஜன் பேசினார்.


தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், 63, அவரது மகன் பென்னிக்ஸ், 31, ஆகியோர் போலீசார் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக, வணிகர்களுடன் நல்லுறவு கலந்தாய்வு கூட்டம் நடத்த, உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர். நேற்று, கரூரில், போலீசார், வணிகர்கள் பங்கேற்ற கலந்தாய்வு நல்லுறவு கூட்டம் நடந்தது. எஸ்.பி., பாண்டியராஜன் பேசியதாவது: ஊரடங்கு உத்தரவு வரும் ஜூலை, 31 வரை, பல்வேறு விதமான தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக, போலீசாருக்கு வணிகர்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளீர்கள். அதேபோல் வரும் காலங்களிலும் அரசு வகுத்துள்ள விதிமுறைகளை வணிகர்கள் பின்பற்றி ஒத்துழைப்பு தர வேண்டும். போலீசாரும், வணிகர்களும் பொதுமக்கள் நலனை காக்கவே களத்தில் இருக்கிறோம். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, அனைவரும் பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். வர்த்தக சங்க தலைவர் ராஜூ, செயலாளர் வெங்கட்ராமன், டவுன் டி.எஸ்.பி., முகேஷ் ஜெயக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X