பொது செய்தி

தமிழ்நாடு

தென்கரை பாசன வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறப்பு

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

கரூர்: மாயனூர் கதவணையில் இருந்து, குறுவை சாகுபடிக்காக, தென்கரை வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


டெல்டா பாசன பகுதிகளில், குறுவை சாகுபடிக்காக கடந்த மாதம், 12ல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கடைமடை பகுதியான நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு, தண்ணீர் கடந்த வாரம் சென்றது. இதனால், கிளை பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கரூர், திருச்சி மாவட்டங்களில், முக்கியமான, 17 கிளை வாய்க்கால்களில், படிப்படியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணையில் இருந்து தென்கரை வாய்க்காலில், முதல் கட்டமாக கடந்த, 28 முதல் வினாடிக்கு, 200 கன அடி தண்ணீர் குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்டது. நேற்று, 300 கன அடியாக உயர்த்தப்பட்டது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, மாயனூர் கதவணைக்கு, 9,635 கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாற்றில், 9,335 கன அடி திறக்கப்பட்டது. கட்டளை மேட்டு வாய்க்காலில், கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருவதால், வரும் ஆகஸ்ட், 1ல் தான் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை (மி.மீ.,) குளித்தலை, 3, தோகைமலை, 5, கிருஷ்ணராயபுரம், 2.2, மாயனூர், 3, பஞ்சப்பட்டி, 11.2, கடவூர், 10.2, பாலவிடுதி, 28.4, மயிலம்பட்டி, 22 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 7.08 மி.மீ., மழை பதிவானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X