ஓய்வூதியதாரர்களுக்கு நேர்காணலிலிருந்து விலக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதியதாரர்களுக்கு நேர்காணலிலிருந்து விலக்கு

Added : ஜூலை 01, 2020
Share

கரூர்: 'நடப்பு ஆண்டில், ஓய்வூதியதாரர்களுக்கு நேர்காணலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது' என, கரூர் கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப் படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், கரூர் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்களுக்கு, 2020ம் ஆண்டிற்கான நேர்காணல், ஜீவன் பிரமான் மற்றும் வாழ்வுச் சான்று அளிப்பது ஆகியவற்றிற்கு நிதித்துறை அரசாணைப்படி விலக்களிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X