கரூர்: 'போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி இணையவழியில் நடக்கிறது' என, மாவட்ட மைய நூலகத்தின் நூலகர் சிவக்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தின் சார்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள், இணையவழியில் நடக்கிறது. முதல் நிலை, முதன்மை போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. குரூப் 1 தேர்வுகளின் பாடத்திட்டத்தின்படி நடப்பு நிகழ்வுகளோடும், மரபு ரீதியான தலைப்புகளை ஒட்டியும் பயிற்சி வழங்கப்படுகிறது. தேவையான பாடங்கள் மற்றும் பகுதிகளைக் கண்டறிய வைக்கும் திறன் மேம்படுத்தப்படும்.அனைத்து பாட வகுப்புகளும், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கற்பிக்கப்படும். இந்த இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை வாரநாட்களில் காலை, 10:00 மற்றும் மாலை 5:00 மணி என இருவேளைகளில் நடக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவியர், ஒருங்கிணைப்பாளரை, 86104 91161 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE