கராச்சி தாக்குதலின் பின்னணியில் இந்தியா: இம்ரான்கான் அடுத்த பொய்| Imran Khan blames India for terror attack on Pakistan Stock Exchange | Dinamalar

கராச்சி தாக்குதலின் பின்னணியில் இந்தியா: இம்ரான்கான் அடுத்த பொய்

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (33)
Share
Imran Khan, Pakistan, India, Karachi, karachi attack, Prime Minister Imran Khan, இம்ரான் கான், பாகிஸ்தான், இந்தியா, கராச்சி, பங்குச்சந்தை, தாக்குதல்

கராச்சி: கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலக வளாகத்தில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இந்தியா உள்ளதாக பாக்., பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் கராச்சியில், சண்ட்ரிகர் சாலையில் அமைந்துள்ள பங்குச்சந்தை அலுவலக வளாகத்தில் ஜூன் 29ம் தேதி, பயங்கரவாதிகள் நான்கு பேர், வளாகத்திற்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், கையெறி குண்டுகளையும் வீசினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், எதிர் தாக்குதல் நடத்தினர். இதில், போலீஸ் எஸ்.ஐ., ஒருவர், நான்கு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இருவர் பலியாயினர்; 7 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த, பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், பயங்கரவாதிகள் நால்வரும் கொல்லப்பட்டனர்.


latest tamil news


இத்தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெக்மூத் குரேஷி கூறியிருந்தார்.

இந்நிலையில், பாக்., பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் பேசியதாவது: மும்பையில் என்ன நடந்ததோ அது பாகிஸ்தானிலும் நடக்க வேண்டும் என இந்தியா நினைக்கிறது. நாட்டில் நிலையற்ற தன்மை ஏற்பட வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு. இந்தத் தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. கடந்த சில மாதங்களாகவே என் அமைச்சரவைக்கு இந்தத் தாக்குதல் குறித்துத் தெரியும். நான் என் அமைச்சர்களிடத்தில் தகவல் தெரிவித்தேன். நாங்கள் முழுமையாக தயாராக இருந்தோம். சதியை முறியடித்தது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றியாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X