சம்பவம் செய்தி

தமிழ்நாடு

என்எல்சியில் பாய்லர் வெடித்து 6 பேர் பலி

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
நெய்வேலி: நெய்வேலி அனல்மின் நிலையத்தில் 2வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 2வது அனல்மின் நிலையத்தின் பொதுமேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.கடலூர் மாவட்டம் நெய்வேலியின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த
Boiler explosion, Neyveli Lignite Corporation plant, Neyveli, tamil nadu, நெய்வேலி, அனல்மின்நிலையம், என்எல்சி, பாய்லர், வெடித்தது, தொழிலாளர்,  பலி, உயிரிழப்பு

நெய்வேலி: நெய்வேலி அனல்மின் நிலையத்தில் 2வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 2வது அனல்மின் நிலையத்தின் பொதுமேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


latest tamil newsகடலூர் மாவட்டம் நெய்வேலியின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 5 பேரை காணவில்லை எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே கடந்த மே மாதம், 6வது யூனிட்டில் பாய்லர் வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.


latest tamil news


Advertisementஅமித்ஷா ஆறுதல்


குஇந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:நெய்வேலியில் உள்ள என்எல்சி அனல்மின் நிலைய விபத்தில் தொழிலாளர்கள் இறந்தது வேதனை அளிக்கிறது. மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக முதல்வர் பழனிசாமியிடம் தெரிவித்தேன். சம்பவ இடத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர், மீட்பு பணிகளில் உதவி வருகின்றனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


latest tamil news
நிதியுதவி அறிவிப்பு


முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில், அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டேன். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.


latest tamil news
பொது மேலாளர் சஸ்பெண்ட்


இந்த சம்பவம் தொடர்பாக 2வது அனல்மின் நிலையத்தின் பொது மேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


latest tamil news
அமைச்சர் ஆறுதல்

பாய்லர் வெடித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அமைச்சர் சம்பத் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.P.Pillai - CHENNAI,இந்தியா
01-ஜூலை-202020:20:05 IST Report Abuse
M.P.Pillai This is not accep. Boiler is inspected by Boiler inspectorate every year and certified for usage. The boiler has duplex safety valves to relieve excess pressure. We need to verify the root cause of the accident. Whether the boiler has crossed the excess pressure or blasted due to material failure at normal operating pressure. Also to verify whether proper inspection and maintanance practices are followed by checking all records.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஜூலை-202020:16:11 IST Report Abuse
Tamilan தொடர் போராட்டங்கள் மூலம் தொழில் நிறுவனங்களை போர்க்களமாக மாற்றிய தமிழினவாதிகள், கொரானாவால் அடங்கிய கொட்டம் நீண்டுகொண்டே போவதால், இப்போது இப்படி ஏதாவது செய்து கொட்டத்தை நிலைநிறுத்தியிருக்கலாம் .
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் NLC பொறுத்தவரை இது போன்ற விபத்துகள் தவிர்க்க முடியாதது யாரையும் எதையும் குற்றம் சொல்ல முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X