சீனாவின் மீதான கோபம் மேலும் மேலும் அதிகரிக்கிறது: டிரம்ப்

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை காணும் போது சீனா மீதான எனது கோபம் மேலும் மேலும் அதிகரிக்கிறது என டிரம்ப் கூறியுள்ளார்.அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மிகப்பெரிய அளவில் 47 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்
corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, coronavirus count, corona toll, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis,
donald trump, us, China, Trump, CoronaVirus Spread, சீனா, கோபம், கொரோனா, வைரஸ், பரவல், டிரம்ப்

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை காணும் போது சீனா மீதான எனது கோபம் மேலும் மேலும் அதிகரிக்கிறது என டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மிகப்பெரிய அளவில் 47 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு 27 லட்சத்தை நெருங்கி வருகிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.3 லட்சமாக உள்ளது. தற்போது தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் நோய் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இது குறித்து தொற்றுநோய் நிபுணரும், அரசின் ஆலோசகருமான அந்தோனி பவுசி, விஷயம் தற்போது கை மீறிவிட்டது, நாம் தவறான திசையில் சென்று கொண்டு இருக்கிறோம் என எச்சரித்துள்ளார்.


latest tamil news


தொற்றுநோயை கட்டுப்படுத்த அதிகாரிகளும் பொதுமக்களும் நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவர் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தொற்றுநோய் அதன் அசிங்கமான முகத்தை உலகம் முழுவதும் பரப்புகிறது, அமெரிக்காவிற்கு பெரும் சேதம் ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்க்கும்போது, நான் சீனா மீது மேலும் மேலும் கோபமடைகிறேன். மக்கள் அதனை பார்ப்பார்கள். நான் அதனை உணர்கிறேன் என கூறியுள்ளார்.


latest tamil news


ஏற்கனவே அமெரிக்கா - சீனா இடையே நீடித்து வரும் வர்த்தக போரை கொரோனா வைரஸ் தொற்றுநோய் தீவிரமாக்கியுள்ளது. வெளிப்படைத்தன்மை இல்லை என சீனா மீது அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. பதிலுக்கு சீனா, நோயைக் கையாளத் தெரியாமல் அதனை திசைத்திருப்புவதற்காக டிரம்பின் நிர்வாகம் தொற்றுநோயை அரசியலாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளது. கொரோனா வைரஸ் தகவல்களை ஆரம்பத்தில் மூடி மறைக்க முயன்றதற்காக உலக நாடுகள் பலவற்றின் பகையை சீனா சம்பாதித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
01-ஜூலை-202018:10:19 IST Report Abuse
மலரின் மகள் சில தகவல்கள் தனிப்பட்டமுறையில் எண்களில் சிலருக்கு மட்டுமே வரும் தனிப்பட்ட செய்திகளாக சில அறிஞர் பெருமக்கள் மருத்துவ விற்பன்னர்கள் சிலாகிப்பதாக வந்தது. மூன்று வகையான வைரஸ்கல் உற்பத்திசெய்யப்பட்டு உற்பத்தியாகி இருக்கின்றன, அவை பரப்படவேண்டிபரவிட்டிருக்கின்றன போலும்.. சுலபமாக அனைவரும் புரிந்து கொள்ளும் சொல்வதானால் பிளாட்டினம் கோல்ட் மற்றும் சில்வர் வகை. பிளாட்டினம் வகை அமெரிக்க ஐரோப்பாவிற்கு. கோல்ட் வகை பிரிட்டனுக்கு, சில்வர் வகை இந்திய துணைக்கண்டம் மற்றும் வளைகுடாவிற்கு என்று ஏற்றுமதியாகிவிட்டன. ஆகையால் தான் அவற்றின் வீரியம் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையாக இருக்கிறது. யாருக்கு எதை கொடுக்கவேண்டுமோ அதை கொடுத்து பொருளாதாரமுடக்கத்தை தந்திருக்கிறது, பிரைச்சினை இல்லாதவர்களுக்கு வெறும் சாதாரணமானது மற்றும் பெயரளவிற்கு தும்மினால் சென்று விடக்கூடியவை ஆப்ரிக்காவிற்கு என்று நன்கு செய்திருக்கிறது. சமயத்திற்கு ஏற்ப அவை மீண்டும் மீண்டும் வருகிறது போலும் உற்பத்தியாகி. இறக்குமதியாகும் அனைத்து பொருட்களும் மிகவும் தீவிரமாக வைரஸ் பரிசோதனைக்கு உட்படுவதுடன் அவை அனைத்தும் தோற்று நீக்கி கிருமி நாசினி மூலம் சரிசெய்து விட்டே கஸ்ட்மஸ் செல்லவேண்டும். சென்னை மும்பை அஹமதாபாத் போன்ற இறக்குமதி பெரிதளவில் இருக்கும் மாநகரங்களில் துறைமுகம் மூலமும் சரக்கு விமானங்கள் மூலமும் அதிகம் வந்திருக்கிறது என்று கூட சந்தேகிக்கிறார்கள். அரசும் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்த அனைத்து சரக்குகளையும் குறிப்பாக அங்கிருந்து வந்தவைகளை பரிசோதித்திருக்கிறது போலும் சில வரி செய்திகளில் வந்தது, மலரிலேயே கூட. அதை பெரிதாக யாரும் விமர்சிக்காமல் விடப்பட்டது. அந்தசெய்தியை சற்று கவனமுடன் படித்திருக்கவேண்டும். ப்ரதியானின் சுற்றுலா பகுதிகளில் சில குறிப்பிட்ட சீன புத்தகம் விற்கும் கடையிலிருந்து ஒரு குறிப்பிட்ட புத்தகனலை அதனுடன் இணைந்த இலவசத்தோடு நிறைய சீனர்கள் வாங்கி சென்றார்கள் எதற்காக என்று அப்போதே சில கட்டுரைகள் வந்தனா. இந்திய வணிக செய்தி ஆங்கில சஞ்சிகைகளில் கூட அந்த கட்டுரை வந்தது. சில சந்தேகங்கள் பல குழப்பதினால் வருவதற்கு காரணம் அதீத மவுனம் காப்பதனால் தான். உள்ளதை உள்ளவாறு கூறியிருந்தால் யார் மீதும் எந்த சந்தேகமும் வராது. பொதுவாக இயற்கை மட்டுமே மிகவும் சக்தி வாய்ந்த கிருமிகளை உருவாக்கவோ பேரழிவு செய்யும் சீற்றங்களை செய்யவோ முடியும் என்பார்கள். எல்லாவற்றிற்கும் மவுனம் காக்க கூடாது, அதுவே சம்மதம் என்று புரிந்து கொல்லப்படுவதற்கான ரிஸ்க் இருக்கிறது என்று சப்பை மூக்குக்காரர்களுக்கு யார் சொல்வது?
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
01-ஜூலை-202017:19:04 IST Report Abuse
வெகுளி நேற்று இருந்த சோவியத் யூனியன் இன்று இல்லை.... இன்று உள்ள சீனா நாளை இருக்காது..... இது காலத்தின் கட்டாயம்....
Rate this:
Cancel
Naresh Giridhar - Chennai,இந்தியா
01-ஜூலை-202016:37:23 IST Report Abuse
Naresh Giridhar ஆரம்பத்தில் சீனாவை தூக்கி பிடித்த ...
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-ஜூலை-202019:00:58 IST Report Abuse
தமிழவேல் ...சங்கிகள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X