சீனாவின் மீதான கோபம் மேலும் மேலும் அதிகரிக்கிறது: டிரம்ப்| Donald Trump says, 'more and more angry at China' over coronavirus spread | Dinamalar

சீனாவின் மீதான கோபம் மேலும் மேலும் அதிகரிக்கிறது: டிரம்ப்

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (13)
Share
corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, coronavirus count, corona toll, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis,
donald trump, us, China, Trump, CoronaVirus Spread, சீனா, கோபம், கொரோனா, வைரஸ், பரவல், டிரம்ப்

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை காணும் போது சீனா மீதான எனது கோபம் மேலும் மேலும் அதிகரிக்கிறது என டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மிகப்பெரிய அளவில் 47 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு 27 லட்சத்தை நெருங்கி வருகிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.3 லட்சமாக உள்ளது. தற்போது தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் நோய் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இது குறித்து தொற்றுநோய் நிபுணரும், அரசின் ஆலோசகருமான அந்தோனி பவுசி, விஷயம் தற்போது கை மீறிவிட்டது, நாம் தவறான திசையில் சென்று கொண்டு இருக்கிறோம் என எச்சரித்துள்ளார்.


latest tamil news


தொற்றுநோயை கட்டுப்படுத்த அதிகாரிகளும் பொதுமக்களும் நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவர் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தொற்றுநோய் அதன் அசிங்கமான முகத்தை உலகம் முழுவதும் பரப்புகிறது, அமெரிக்காவிற்கு பெரும் சேதம் ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்க்கும்போது, நான் சீனா மீது மேலும் மேலும் கோபமடைகிறேன். மக்கள் அதனை பார்ப்பார்கள். நான் அதனை உணர்கிறேன் என கூறியுள்ளார்.


latest tamil news


ஏற்கனவே அமெரிக்கா - சீனா இடையே நீடித்து வரும் வர்த்தக போரை கொரோனா வைரஸ் தொற்றுநோய் தீவிரமாக்கியுள்ளது. வெளிப்படைத்தன்மை இல்லை என சீனா மீது அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. பதிலுக்கு சீனா, நோயைக் கையாளத் தெரியாமல் அதனை திசைத்திருப்புவதற்காக டிரம்பின் நிர்வாகம் தொற்றுநோயை அரசியலாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளது. கொரோனா வைரஸ் தகவல்களை ஆரம்பத்தில் மூடி மறைக்க முயன்றதற்காக உலக நாடுகள் பலவற்றின் பகையை சீனா சம்பாதித்துள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X