நீ நான் மற்றும் நம் ரிக்சா

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
வீடு வாசல் இல்லாத வயதான தம்பதிகள் ஒரு ரிக்சாவிலேயே தங்கள் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.தற்போது 76 வயதாகும் குமார் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர். இதன் காரணமாக பேருக்கு உறவினர்களால் வளர்க்கப்பட்டு வாலிப வயதை அடைந்ததும் தனித்து விடப்பட்டவர். அப்போது முதல் கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து வருடமாக ரிக்சாதான் ஒட்டிவருகிறார்.கடந்த 80 ம் வருடம் ஜோதி என்பவரை




latest tamil news




வீடு வாசல் இல்லாத வயதான தம்பதிகள் ஒரு ரிக்சாவிலேயே தங்கள் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

தற்போது 76 வயதாகும் குமார் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர். இதன் காரணமாக பேருக்கு உறவினர்களால் வளர்க்கப்பட்டு வாலிப வயதை அடைந்ததும் தனித்து விடப்பட்டவர்.


latest tamil news



அப்போது முதல் கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து வருடமாக ரிக்சாதான் ஒட்டிவருகிறார்.கடந்த 80 ம் வருடம் ஜோதி என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவருக்கு இப்போது வயது 72.

இவர்களுக்கு ஒரு மகன் உண்டு மகனை வளர்த்து திருமணம் செய்து வைத்தனர் வந்த மருமகள் இவர்கள் வீட்டில் இருந்தால் நான் இருக்கமாட்டேன் என்று ‛பாசம்' காட்ட ‛சின்னஞ்சிறுசுகள் நீங்க நல்லாயிருங்கப்பா' என்று சொல்லிவிட்டு தங்களுக்கு சொந்தமான ரிக்சாவுடன் திருச்சி ஸ்ரீரங்கம் வந்தடைந்தனர்.

அதன்பிறகு நான் நீ மற்றும் நம் ரிக்சா என்று இவர்கள் வாழ்க்கை சுருங்கிப் போனது.ரிக்சாவில் ஒரு பெட்டி மற்றும் சாப்பிடும் தட்டு என்று சில தட்டுமுட்டு சாமான்கள் உண்டு பெட்டியில் இவர்களது உடமைகளாக இரண்டு செட் உடைகள் உண்டு.காலையில் அம்மா மண்டபத்தில் குளித்துவிட்டு இவர் ரிக்சா ஒட்டி பிழைக்க கிளம்பிவிடுவார் ஜோதி அந்த பகுதயில் உள்ள சில வீடுகளில் வீட்டு வேலை பார்க்க சென்றுவிடுவார்.இரவானதும் இருவரும் அம்மா மண்டபம் அருகே வந்துவிடுவர் பின் அங்கேயே துாங்கிவிட்டு மறுநாள் தங்கள் பிழைப்பை பார்க்க சென்றுவிடுவர்.இப்படித்தான் இவர்களது வாழ்க்கை யாரையும் சிரமப்படுத்தாமல் ஒடிக்கொண்டு இருந்தது.

எல்லோரது வாழ்க்கையையும் புரட்டிப்போட்ட கொரோனா இவர்களை மட்டும் விட்டுவிடுமா என்ன?

வீட்டிற்குள் முடங்கிப் போன மக்களால் ரிக்சா ஒட்டம் இல்லை , வீட்டு வேலைக்கு அனுமதிக்காததால் ஜோதிக்கும் வீட்டு வேலை இல்லை.

ஆனால் வயிறு பசிக்கிறதே,ஜோதியையும்,குமாரையும் தெரிந்த ஆட்கள் பாவம் வயதான தம்பதிகள் என்று ஏதாவது பார்த்து பணமாகவோ, உணவாகவோ கொடுக்கின்றனர் அதை வைத்து காலம் ஒடுகிறது.

காலம் இப்படியே இருந்துவிடாது விரைவில் விடியும் கொரோனா மடியும் என்று நம்பிக்கை வைத்துள்ளனர்

நம்பிக்கைதானே வாழ்க்கையை நகர்த்துகிறது.

-எல்.முருகராஜ்
படங்கள்:மணிகண்டன்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
04-ஜூலை-202011:10:30 IST Report Abuse
Srinivasan Rangarajan இங்கு மட்டும் இல்லை அமெரிக்காவில் வீடுஇல்லாதோர் (Homeless) பலர் கார்களையே வசிப்பிடமாக கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X