ஐரோப்பிய வான் பரப்பில் பறக்க பாக்., விமானங்களுக்கு தடை

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
Europe, bans entry, Pakistan, International Airlines, pilot license, ban, fly, Europe, பிஐஏ, ஐரோப்பா, வான்பரப்பு, லைசென்ஸ் மோசடி, தடை

லாகூர்: பாகிஸ்தான் சர்வதேச விமானங்கள்(பிஐஏ), அடுத்த 6 மாதங்கள் ஐரோப்பிய ஒன்றிய வான் பரப்பில் பரப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய விமான பாதுகாப்பு ஆணையம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தானில் 262 விமானிகள் தேர்வில் மோசடி செய்ததாக கூறி அவர்களின் லைசென்சை அந்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சர் குலாம் சர்வார் கான் தெரிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

து தொடர்பாக பிஐஏ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிஐஏ விமானங்களை, ஐரோப்பிய ஒன்றிய வான்பரப்பில் பறப்பதற்கு 6 மாதம் ஐரோப்பிய ஒன்றிய விமான பாதுகாப்பு அமைப்பு தடை விதித்துள்ளது. இன்று(ஜூலை1) முதல் அமலுக்கு வரும் இந்த தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்காலிகமாக ஐரோப்பிய நாடுகளுக்கு விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், ஐரோப்பா செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் அதனை வேறு தேதிக்கு மாற்றி கொள்ளலாம் அல்லது முழு பணத்தையும் திரும்ப பெற்று கொள்ளலாம்.
பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, மேல்முறையீடு செய்யவும், ஐரோப்பிய ஒன்றிய விமான பாதுகாப்புஅமைப்பு தெரிவித்த கவலைகளை சரி செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பாகிஸ்தான் அரசு மற்றும் பிஐஏ அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கையால், இந்த தடை விரைவில் நீக்கப்படும் என நம்புகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


கடந்த வாரம், பாகிஸ்தான் விமான போக்குவரத்து அமைச்சர் கான், விமானிகள் தேர்வில் 262 பேர் மோசடி செய்து தேர்ச்சி பெற்றனர். இதனால், பிஐஏ.,வின் 141, ஏர் புளூவின் 9, செரீன் நிறுவனத்தின் 10 மற்றும் ஷாகீன் ஏர்லைன்சின் 17 பேர் என 262 விமானிகளின் லைசென்சை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். அதில் பிஐஏ நிறுவனத்தில் 36 பேர் ஓய்வு பெற்று விட்டதாகவும், ஏர் புளூவில் 7 பேர் பணியில் இல்லை எனவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கைகக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள விமானிகள் சங்கம், இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.ANBARASAN - muscat,ஓமன்
03-ஜூலை-202011:35:37 IST Report Abuse
K.ANBARASAN சுடலை சப்போர்ட் பண்ணுற நாடு பின்ன எப்படி இருக்கும்.
Rate this:
Cancel
K.ANBARASAN - muscat,ஓமன்
03-ஜூலை-202011:33:12 IST Report Abuse
K.ANBARASAN ஹா ஹா ...மண்ணாங்கட்டி பாகிஸ்தான் . போலி லைசென்ஸ் பய்லட்டுகள் கையில் பயணிகள் விமானங்கள்... அட கடவுளே
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
02-ஜூலை-202006:19:38 IST Report Abuse
 Muruga Vel அந்த காலங்களிலே PIA என்றால் பயணம் செய்யும் முன் Please Inform Allah என்று சொல்வார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X