'உங்கள் வேலையை பாருங்கள்'; ஹாங்காங் சட்ட விமர்சனம் குறித்து சீனா கருத்து

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
new security law, China, Hong Kong Law, Foreign Critics, hong kong, beijing, சீனா, ஹாங்காங், சட்டம்,

பீஜிங்: ஹாங்காங்கை தனது சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டு வரும் வகையில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ள சீனா, அது குறித்து பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்ததற்கு 'உங்கள் வேலையை பாருங்கள். எங்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்,' என தடித்தனமாக பதிலளித்துள்ளது.

ஹாங்காங்கானது சீனாவின் ஆளுகைக்குள் வரும் தன்னாட்சி பிரதேசமாகும். தனி நிர்வாகம் காரணமாக இது சீனாவுடன் வேறுபட்டு தனித்தன்மையுடன் விளங்குகிறது. வேறு நாடுகளின் எல்லையையே வளைத்துப் போட நினைக்கும் சீனா, ஹாங்காங்கின் தன்னாட்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல், தனது பிடியை கடந்த சில ஆண்டுகளாக இறுக்கிக் கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டம் கொண்டு வந்தது. இதனை ஹாங்காங்கே திரண்டு ஒருமித்த குரலில் எதிர்த்தது. பின்னர் அச்சட்டம் நிறைவேற்றப்படாது என தலைமை அதிகாரி கேரி லாம் அறிவித்தார்.


latest tamil news


கடந்த மாதம் சீன தேசிய கீதம் அவமதிப்பு தடை சட்டம் ஹாங்காங்கில் கொண்டு வரப்பட்டது. இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் அடக்குமுறையை மக்கள் மீது பிரயோகிக்கும் வகையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா நிறைவேற்றியுள்ளது. இது ஹாங்காங்கின் ஜனநாயகத்தை நசுக்கும் செயல் என பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது ஒரு துக்க தினம் என அமெரிக்கா கூறியுள்ளது. ஐரோப்பிய யூனியன் இதற்கு வலுவான மறுப்பை தெரிவித்துள்ளது. ஹாங்காங் மக்களுக்கு உதவ உறுதியுடன் உள்ளதாக தைவான் கூறியுள்ளது. இது போன்று 27 நாடுகள் சீனா தனது நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.


latest tamil news


உலக நாடுகளின் எதிர்ப்பு குறித்து ஹாங்காங் விவகார அமைச்சர் ஜாங் சியோமிங் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ‛நாங்கள் விரும்புவது ஒரே நாடு ஒரே அமைப்பு. அப்படி இருந்தால் எளிமையாக இருக்கும். கிரிமினல் சட்டம், குற்றவியல் நடைமுறை மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் பிற தேசிய சட்டங்களை ஹாங்காங்கில் எங்களால் சுமத்த முடியும். இதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம். உங்கள் வேலையை பாருங்கள். சில நாடுகள் இப்போது சீன அதிகாரிகள் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்போம் என கூறுகின்றன. இது வன்முறையாளர்களின் தர்க்கம்,' என கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
05-ஜூலை-202014:37:30 IST Report Abuse
madhavan rajan காஷ்மீர் விஷயத்தை இவர்கள் அதுபோல இவர்கள் வேலையை மட்டும் பார்த்தார்களா? பிறருக்கு ஒரு நியாயம் தனக்கு ஒரு நியாயமா?
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
01-ஜூலை-202018:44:22 IST Report Abuse
Chandramoulli உலக நாடுகள் இனிமேல் தான் வேலையை ஆரம்பிக்க போகிறார்கள் . இந்தியா மீது தாக்குதல் நடக்கும் நேரத்தில் ஹாங்ஹாங்கில் உலகநாடுகள் உள்ளே நுழைய வாய்ப்பு அதிகம் . சீனாவுக்கு ஆப்பு தயார்
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
01-ஜூலை-202017:27:18 IST Report Abuse
வெகுளி உலக நாடுகள் வேலையே இனி சீனாவை அடக்குவதாகத்தான் இருக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X