கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கப்பலுார் டோல்கேட்டில் துப்பாக்கிச்சூடு குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

மதுரை : மதுரை கப்பலுார் டோல்கேட்டில் துப்பாக்கியால் சுட்ட சசி மீதான குண்டர் சட்ட கைது உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் சசி 25. இவர் நண்பர்கள் 5 பேருடன் காரில் ஒரு வழக்கு விசாரணைக்காக திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றத்திற்கு 2019 ஆக.,29 ல் சென்றார். மதுரை திருமங்கலம் கப்பலுார் டோல்கேட் சென்றபோது, ஊழியர்கள் கட்டணம் கேட்டனர்.எம்.எல்.ஏ., பாஸ் என இவர்கள் காட்டிய ஜெராக்ஸ் நகலை ஊழியர்கள் ஏற்க மறுத்ததால் இரு தரப்பிற்கும் பிரச்னை ஏற்பட்டது. துப்பாக்கியால் வானை நோக்கி சசி சுட்டார். சசி, தனசேகரன் உட்பட சிலரை திருமங்கலம் நகர் போலீசார் கைது செய்தனர்.சசியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய 2019 அக்.,15 ல் மதுரை கலெக்டர் உத்தரவிட்டார்.
சசியின் சகோதரி தனலட்சுமி உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: சசியுடன் காரில் வந்தவர்கள் சம்பவத்தின்போது தப்பிச் சென்றனர். சசியை டோல்கேட் ஊழியர்கள் மற்றும் அருகிலிருந்தவர்கள் தாக்க வந்தனர். தற்காப்பிற்காக சசி வானை நோக்கிச் சுட்டார். உரிய விதிகளை பின்பற்றி குண்டர் சட்ட கைது உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. குண்டர் சட்ட கைது உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

ஏற்கனவே விசாரணையின் போது அரசுத் தரப்பில், 'போலி பாஸ் வைத்து தகராறு செய்துள்ளனர். உரிமம் இல்லாத துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,' என தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், 'துப்பாக்கிக் கலாசாரத்தை இங்கு அனுமதிக்க முடியாது,' என அதிருப்தியை வெளியிட்டு தீர்ப்பை ஒத்திவைத்தனர்.நேற்று நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு, 'உரிய விதிகளை பின்பற்றி குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X