கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சாத்தான்குளம் கூடுதல் எஸ்.பி., டி.எஸ்.பி., ஆஜர்

Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மதுரை:

துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில் காயமடைந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கோவில்பட்டி கிளைச் சிறையில் மரணமடைந்தனர். இது தொடர்பான அவமதிப்பு வழக்கில் கூடுதல் எஸ்.பி.,குமார், டி.எஸ்.பி.,பிரதாபன், போலீஸ்காரர் மகாராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகினர். அவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.நேற்று முன்தினம் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி உத்தரவு: சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து பொதுநல வழக்கை தனியாக விசாரிக்கிறது. கோவில்பட்டி மாஜிஸ்திரேட் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன் விசாரணைக்கு சென்றுள்ளார். துாத்துக்குடி கூடுதல் எஸ்.பி.,குமார், டி.எஸ்.பி.,பிரதாபன் முன்னிலையில் மாஜிஸ்திரேட் விசாரணையை போலீசார் வீடியோ பதிவு செய்துள்ளனர். மாஜிஸ்திரேட்டை நோக்கி போலீஸ்காரர் மகாராஜன் இழிவான, ஆட்சேபகரமான கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து மாஜிஸ்திரேட் எங்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.இதனால் கூடுதல் எஸ்.பி.,குமார், டி.எஸ்.பி.,பிரதாபன், போலீஸ்காரர் மகாராஜன் மீது இந்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. சுதந்திரமான, நேர்மையான விசாரணை நடக்க ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி.,மற்றும் சாத்தான்குளம் ஸ்டேஷனில் பணிபுரியும் இதர போலீசாரை தமிழக அரசு உடனடியாக இடமாறுதல் செய்ய வேண்டும். கூடுதல் எஸ்.பி., குமார், டி.எஸ்.பி., பிரதாபன், போலீஸ்காரர் மகாராஜன் ஆஜராக வேண்டும் என்றனர்.நேற்று நீதிபதிகள் அமர்வு முன் கூடுதல் எஸ்.பி.,குமார், டி.எஸ்.பி.,பிரதாபன், போலீஸ்காரர் மகாராஜன் ஆஜராகினர்.அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், 'ஒருவாரமாக தொடர் பணியால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக இத்தகைய தவறு நடந்துவிட்டது. அவர்கள் நிபந்தனையற்ற முறையில் வருத்தம் தெரிவித்துள்ளனர். மகாராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கூடுதல் எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி., காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் ஸ்டேஷனில் பணிபுரிந்த போலீசார் பல்வேறு ஸ்டேஷன்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்,' என்றார்.நீதிபதிகள், 'அரசின் நடவடிக்கையை பாராட்டுகிறோம். கூடுதல் எஸ்.பி.,உட்பட 3 பேரும் 4 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்,' என்றனர். நெல்லை டி.ஐ.ஜி., பிரவீன்குமார் அபினபு, துாத்துக்குடி எஸ்.பி., அருண்பால கோபாலன் ஆஜராகினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
02-ஜூலை-202016:48:51 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN இப்படிநீதிதேவன் பாடுபடுவது வரவேற்க கூடியதே. இதேபோல் கூலி படைகள் செய்யும் கொலைகளுக்கும் தானே முன் வந்து செயல்பட்டால் பாராட்டலாம். இதனால் ஒன்றும் இறந்தவன் மீளப்போவதில்லை . என்னமோ கடமையை ஆற்றனும் அவ்வளவுதான்.சட்டத்தை மதிக்கச்செய்யனும் அதற்குத்தான் வழி தெரியல. இட ஒதுக்கீடு செயல்படுது தவராமல்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X