பொது செய்தி

இந்தியா

ஜூன் மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.90,917 கோடி

Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
GST, Revenue Collection, June, revenue, fiscal year, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, ஜிஎஸ்டி, வரி, வசூல், ஜூன்

புதுடில்லி: கொரோனா பரவல் தாக்கத்தால் நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், நடப்பு நிதியாண்டில், ஜூன் மாத மொத்த ஜி.எஸ்.டி., வரி வசூல் ரூ.90 ஆயிரத்து 917 கோடி வசூலாகியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கின. அடுத்தடுத்த ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகளால் தொழில்துறை கொஞ்சம் கொஞ்சமாக மீள தொடங்கின. ஊரடங்கு நாட்களில் ஏப்ரல் மாத ஜி.எஸ்டி., வரி வசூலானது ரூ.32,294 கோடியாகவும், மே மாதத்தில் ரூ.62,009 கோடியாகவும் கிடைத்தது.


latest tamil news


இந்நிலையில், ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூலானது சற்று அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் ரூ.90,917 கோடி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கடந்த ஆண்டை இதே மாத வசூலை பொறுத்தவரையில் தொடர்ந்து 3வது முறையாக குறைந்துள்ளது. அதாவது, கடந்தாண்டு ஜூன் மாதத்தை விட 9 சதவீதம் அளவிற்கான வசூல் குறைந்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரல், மே மாதங்கள் முறையே இந்தாண்டு 28, 62 சதவீதம் அளவிற்கு குறைந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஜூன் மாத வரி வசூலில் மத்திய ஜிஎஸ்டி - ரூ.18 ஆயிரத்து 980 கோடியும், மாநில ஜிஎஸ்டி - ரூ.23 ஆயிரத்து 970 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி - ரூ.40 ஆயிரத்து 302 கோடியும் வசூலாகியுள்ளது. மாநில அரசுகளுக்கு இழப்பீடாக ரூ.7,665 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
01-ஜூலை-202016:32:22 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா பொருளாதாரம் சிறப்பாக இருக்குங்கிறத GST வசூலை பார்க்காமலே தெரிந்துகொள்ளலாம்.
Rate this:
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
01-ஜூலை-202015:39:56 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா பொருளாதாரம் மிக வலுவாக உள்ளதை தான் இது காட்டுகிறது. எனவே இனி 200 ரூபாய் கூலி காணாது. அதை உயர்த்தி வழங்கும்படி தானே தலைவரை கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு வருங்கால தலைவர் இன்பநிதியின் அடிவிழுதுகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X