பொது செய்தி

தமிழ்நாடு

தொடர்ந்து 2வது மாதமாக அதிகரித்த மானியமில்லா சிலிண்டர் விலை

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Gas Cylinder, Price, Hike, Chennai, LPG, cylinder, Liquified petroleum gas, lpg cylinder, non-subsidised, LPG cylinder price, India, coronavirus, TN, Tamil Nadu lpg price, காஸ், கேஸ், சிலிண்டர், விலை, உயர்வு

சென்னை: தொடர்ந்து 2 மாதமாக மானியமில்லாத காஸ் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் 4 ரூபாய் அதிகரித்து, சென்னையில் ரூ.610.50 ஆக உள்ளது.

தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.


latest tamil news



விலை ஏற்றம்


இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தொடர்ந்து உயர்ந்து வந்த சிலிண்டர் விலை, கடந்த மார்ச் முதல் தொடர்ந்து 3 மாதமாக குறைந்தது. பின்னர் கடந்த மே மாதம் மீண்டும் உயரத்தொடங்கியது. தற்போது இன்று (ஜூலை 1ம் தேதி) வெளியான அறிவிப்பின்படி, தமிழகத்தில் மானியமில்லா வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.4 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் மே மாதத்தில் ரூ.606.50 ஆக இருந்த சிலிண்டர் விலை தற்போது ரூ.610.50 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், டில்லியில் ஒரு ரூபாயும், கோல்கட்டாவில் ரூ.4.50-ம், மும்பையில் ரூ.3.50-ம் உயர்ந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
01-ஜூலை-202020:17:03 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு உண்மையில் டீசல் விலை பெட்ரோலை விட அதிகரிக்க செய்த கையால் ஆகா அரசு தானே இது
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
02-ஜூலை-202011:36:49 IST Report Abuse
Chowkidar NandaIndiaஉண்மையில் விலைவாசி மற்றும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பருப்பு, காய்கறி, மளிகை போன்றவைகளின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியாத இத்தாலி ஊமைத்துரை அரசு தானே எதற்கும் ப்ரயோஜனமில்லா கையாலாகாத அரசு....
Rate this:
Cancel
01-ஜூலை-202020:13:36 IST Report Abuse
ஆப்பு GST வசூல் சும்மா பிச்சிக்கிட்டு போகுதாமில்லே...
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
01-ஜூலை-202016:18:56 IST Report Abuse
sundarsvpr விலைவாசி உயர்வு தவிர்க்க இயலாது. மக்களுக்கு வாங்கும் சக்தி குறைவு என்றால் அதுதான் விலை உயர்வு. விலைவாசி உயர்வு பற்றி ஊடகங்கள் தான் மிகைப்படுத்துகின்றன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X