'செப்டம்பர் வரை அலுவலகம் திறப்பில்லை' : கூகுள் அறிவிப்பு

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020
Share
Advertisement
Google, Reopening, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, Office, Virus spread, Cases, கூகுள், அலுவலகம், திறப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து ஜூலையில் திறக்க திட்டமிட்டிருந்த அலுவலகங்கள் திறப்பை, செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24மணி நேரத்தில் மட்டும் 47,000க்கும் மேற்பட்டோருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 27.2 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.30 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கலிஃபோர்னியா, புளோரிடா மற்றும் டெக்சாஸ் உள்ளிட்ட 14 மாகாணங்களிலும் ஜூன் மாதத்தில் கொரோனா பாதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 46 சதவீதமும், இறப்புகள் 21 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளன.


latest tamil news


இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள அனைத்து கூகுள் அலுவலகங்களும் வரும் செப்டம்பர் 7ம் தேதி வரை மூடப்பட்டிருக்குமென கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் கேத்தரின் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கூகுள் பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பல்வேறு நகரங்களில் உள்ள கூகுள் நிறுவனத்தின் அலுவலகங்கள், ஜூலை 6ம் தேதி முதல் 10 சதவீத திறனுடன் மீண்டும் திறக்கப்படும். நிபந்தனைகள் அனுமதிக்கும்பட்சத்தில் செப்டம்பரில் 30 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்படுமென கடந்த மே மாதம் கூகுள் தெரிவித்திருந்தது.


latest tamil news


'வீட்டிலிருந்து பணிபுரியும் அனைவரும், உங்களது மேலாளர் கூறும் வரை தொடர்ந்து வேலையை செய்து வாருங்கள். செப்டம்பர் 7 திங்கள் வரை இந்த வழிகாட்டுதல் துவக்கத்தில் மாறும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை' என்று கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய பாதுகாப்பு துணைத் தலைவர் கிறிஸ் ராகோவ் மெமோவில் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X