பொது செய்தி

இந்தியா

நெடுஞ்சாலை பணியில் சீனாவுக்கு அனுமதியில்லை: நிதின் கட்காரி

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
நெடுஞ்சாலை, நிதின்கட்காரி, சீனா, Chinese companies, Indian highway projects, road, Nitin Gadkari, Union Minister, investment, road construction,


புதுடில்லி: நெடுஞ்சாலைத்துறை திட்டப்பணிகளில் சீன நிறுவனங்கள் அனுமதிக்கப்படாது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் துறையில், சீனாவின் முதலீடு ஊக்குவிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியாவில் சாலை கட்டுமான பணிகளில் கூட்டு திட்டங்களில், சீனா நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது. இதற்காக மத்திய அரசு உறுதியான முடிவை எடுத்துள்ளது. நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்களை தடை செய்யவும், இந்திய நிறுவனங்களுக்கு விதிகளை தளர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட சில திட்டங்களில் சீன நிறுவனங்கள் இருந்தாலும், இனி வரும் காலங்களில் , சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும். கட்டுமான விதிகள் சரியில்லாமல் உள்ளது. அதனை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.


latest tamil news




அதனை மாற்றுவதன் மூலம், இந்திய நிறுவனங்கள் பயன்பெறும். தொழில்நுட்பம், ஆலோசனை மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் கூட்டு திட்டமாக இருந்தாலும், சீன நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம். தொழில்நுட்பம், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகள் ளை மேம்படுத்த வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கிறோம். சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறையில் கூட்டு திட்டங்களை ஆதரிக்கிறோம். ஆனால், அவற்றில் சீனாவை சேர்க்க முடியாது. அந்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
01-ஜூலை-202020:15:43 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு எல்லாம் பீகார் தேர்தல் வரை இந்த படம் ஓடும் அப்புறம் ரிசல்ட் பொறுத்து தொடருமா என்று தெரியும்
Rate this:
Cancel
01-ஜூலை-202020:12:31 IST Report Abuse
ஆப்பு tencent, makemytrip இன்னும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இதெல்லாம் சீன முதலீட்டில்தான் ஓடுது
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
01-ஜூலை-202019:55:52 IST Report Abuse
Ray மேலும் மேலும் இது தொடரட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X