பேரனுடன் சென்ற தாத்தாவை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Boy, Survives, Terror Attack, J&K, Police, rescue, grandfather's body, Sopore terrorist attack, Grandfather, sopore, சிறுவன், பயங்கரவாதிகள், தாக்குதல், தாத்தா, காஷ்மீர்

ஸ்ரீநகர்: காஷ்மீரின் சோபோர் பகுதியில் சிர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில், 3 வயது சிறுவன் உயிர் தப்பினான். ஆனால், சிறுவனுடன் வந்த அவனது தாத்தா உயிரிழந்தார்.

காஷ்மீரின் சோபோரின் டவுனில் இன்று காலை பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது, ஸ்ரீநகரில் இருந்து ஹாந்தவாராவுக்கு தனது தாத்தாவுடன் 3 வயது சிறுவன் காரில் சென்றுள்ளான். சோபோர் அருகே சென்ற போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காரின் மீதும் குண்டுகள் பாய்ந்துள்ளன. இதில் தாத்தா சம்பவ இடத்திலேயே பலியாக, அவரது உடல் அருகே சிறுவன் அழுதுக்கொண்டிருக்கும் புகைப்படம் பலரது இதயத்தையும் கனக்க செய்துள்ளது.


latest tamil news


மேலும் சிறுவனை போலீசார் அழைத்து செல்லும் புகைப்படத்தையும் காஷ்மீர் போலீசார் டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு சிஆர்பிஎப் வீரரும் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் கூறுகையில், ‛பயங்கரவாதிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஒரு வீரர் உயிரிழந்துள்ளார். சிஆர்பிஎப் வீரர்கள் பயங்கரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தியும் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்,' எனக் கூறினர்.


latest tamil news


கடந்த வாரம் அனந்த்நாக் பகுதியில் பயங்கரவாதிகள், சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில், நிஹான் என்ற 6 வயது சிறுவன், நிறுத்தப்பட்ட காரில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், குண்டு பாய்ந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shakti - vilupuram,இந்தியா
03-ஜூலை-202002:26:50 IST Report Abuse
shakti அக்கப்போர்
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஜூலை-202018:33:56 IST Report Abuse
Janarthanan மூர்க்கர்கள் இதெல்லாம் செய்து என்ன அடைய போறீங்க??
Rate this:
Cancel
ஆல்வின், பெங்களூர் காங்கிரஸ் தமிழக தலைவர் அழகிரி மயான அமைதி. ஊடகங்கள் பெரும் அமைதி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X