‛இறைவா எனக்கு மாயத்தை காண்பி'; மஹா., முதல்வர் உத்தவ் பிரார்த்தனை

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
Thackeray, Uddhav Thackeray, Pandharpur, pray, miracle, coronavirus crisis, covid, Crisis, maharashtra, maha cm, உத்தவ், தாக்கரே, பிரார்த்தனை

மும்பை: கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவிலேயே மஹாராஷ்டிரா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 'கொரோனாவை அழிக்க தொடங்கி மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்வை கொடு' என இறைவனிடம் வேண்டிக் கொண்டதாக முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.


latest tamil news


நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பில் 30 சதவிகிதம் அளவிற்கு மஹாராஷ்டிராவில் பதிவாகியுள்ளது. 1.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, அதில் 89 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 7,610 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ஆசாதி ஏகாதசியை முன்னிட்டு இன்று (ஜூலை 1) காலை மஹா., முதல்வர் உத்தவ் தாக்கரே அவரது மனைவி, மகனுடன் பந்தர்பூரில் உள்ள விட்டல் கோயிலில் வழிபாடு நடத்தினார். மஹா., முதல்வராக இருப்பவர்கள் இந்த நாளில் அங்கு வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


latest tamil news


சிவசேனா முந்தைய அரசாங்களில் பங்கு வகித்த போது இந்த கோயிலில் தாக்கரே குடும்பத்தினர் வழிபாடு நடத்தியதில்லை. முதல்வராக பதவியேற்ற பின்பு முதல் முறையாக இக்கோயிலில் வழிபாடு நடத்தியுள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “நான் ஒரு மாயத்தை காண விரும்புகிறேன் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தேன். மனிதர்களாகிய நம் கைகள் கட்டப்பட்டுள்ளன. எங்களிடம் மருந்து அல்லது வேறு எதுவும் இல்லை. முகக்கவசத்துடனேயே நாங்கள் வாழ்வது எப்படி? இன்று முதல் கொரோனாவை அழிக்கத் தொடங்கி, உலகம் முழுவதும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை கொடுங்கள்.” என பிரார்த்தனை செய்ததாக கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
02-ஜூலை-202020:10:58 IST Report Abuse
sankaseshan தாக்கரே சொன்னால் சரிதான் இதை எடப்பாடி சொன்னால் சுடலைக்கு கோபம் வரும் மூக்குக்கு மேலே
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
01-ஜூலை-202020:56:34 IST Report Abuse
Gnanam ஆண்டவன் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறான். பிரார்த்தனை கேமராவை நோக்கி செய்கிறார்கள். எப்படியும் இவர் மனத்தால் நினைத்ததை ஆண்டவன் கேட்டிருப்பான். நல்லதே நடக்கும்.
Rate this:
Cancel
SIVA G india - chennai,இந்தியா
01-ஜூலை-202020:28:27 IST Report Abuse
SIVA G  india பிரார்தனை ஆண்டவனை பார்த்துதான் இருக்க வேண்டும் போஸ் கொடுப்தற்கல்ல. அந்த அளவு ஆதமார்தமான பிரார்தனை போலும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X