ஹாங்காங்கை சேர்ந்தவர்களுக்கு 30 லட்சம் பாஸ்போர்ட்: பிரிட்டன் முடிவு

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
ஹாங்காங், பிரிட்டன், பாஸ்போர்ட், டாமினிக் ராப், UK, offer, passport, Hong Kong, residents, citizenship, China, new law

லண்டன் : ஹாங்காங்கை சேர்ந்தவ 30 லட்சம் பேருக்கு, பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பான அறிவிப்பை அந்நாட்டு பார்லிமென்டில் வெளியுறவு அமைச்சர் டாமினிக் ராப் வெளியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹாங்காங் மீதான தன் கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் வகையில், சீனா கொண்டு வந்துள்ள புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக ஹாங்காங்கில் போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஹாங்காங்கை சேர்ந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட பிரிட்டன் அரசு முன்வந்துள்ளது. இதன்படி ஹாங்காங்கை சேர்ந்தவர்களுக்கு 30 லட்சம் பாஸ்போர்ட் வழங்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு, பிரிட்டன் பார்லிமென்டில் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.


latest tamil news



இது தொடர்பாக பார்லிமென்ட் நிகழ்ச்சி நிரலில், ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டம் , அதற்கு பிரிட்டன் பதிலடி '' என்ற தகவல் இடம்பெற்றுள்ளது. சீனாவின் நடவடிக்கை மனித உரிமை மீறல் எனவும், இந்த சட்டத்தை கொண்டுவந்ததற்காக சீனா மற்றும் ஹாங்காங் அதிகாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சில பிரிட்டன் எம்.பி.,க்கள், வெளியுறவு அமைச்சர் டாமினிக் ராப்பை வலியுறுத்தியுள்ளனர்.

ஹாங்காங்கின் அரசியல் வடிவமைப்பை மாற்றும் சீனாவுக்கு பதிலடி கொடுக்க, ஜி7 நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை முடிவு செய்துள்ளன. 1977 க்கு முன்பு பிறந்த ஹாங்காங்கை சேர்ந்தவர்களுக்கு பிரிட்டன் பாஸ்போர்ட் வழங்கப்பட உள்ளது. ஹாங்காங்கில், பலத்த எதிர்ப்பையும் மீறி, சீனா தேசிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றினால், பிரிட்டன் விசா அமைப்பில், மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவேன் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஜூலை-202000:03:14 IST Report Abuse
தல புராணம் ஹாங்காங்கின் மொத்த மக்கள்தொகை 75 லட்சம். அதில் 30 லட்சம் பேருக்கு பிரிட்டிஷ் பாஸ்போர்ட். எப்படி குழுக்கள் முறையிலா? சரி இதுக்கு சீனா 30 லட்சம் "ஓராண்டு விசா" வழங்கி விட்டு 2021 இல் சீன - பிரிட்டிஷ் ஒப்பந்தம் முடிவுக்கு வரும்போது அவர்களை லண்டனுக்கு பேக் செய்தால், பிரிட்டன் என்ன செய்யும் ? இப்போதிருக்கும் 6.8 கோடி பிரிட்டிஷ் பிரஜைகளுடன் இவர்களை அரவணைத்து கொள்ளுமா? அதுக்கு வெள்ளை தோல் உள்ளவர்கள் ஒத்துப்பாங்களா? வாக்கெடுப்பு நடத்தி பாருங்கள். அப்புறம் முடிவெடுக்கலாம்.
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
01-ஜூலை-202020:31:22 IST Report Abuse
Allah Daniel அப்பிடியே 140 கோடி இந்தியிர்க்களுக்கும் ஒரு பாஸ்ப்போர்ட்டை அடிச்சிட்டு..200 வருஷம் இந்த நாட்டை திருடியத்திற்கு...
Rate this:
Cancel
01-ஜூலை-202020:11:29 IST Report Abuse
நக்கல் சீன கம்யூனிட்டுகளை எல்லோரும் போட்டு மிதிக்கணும்... அந்த நாட்டை ரஷ்யா மாதிரி உடைக்கணும்.. அதே மாதிரி பாகிஸ்தானையும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X