பொது செய்தி

இந்தியா

ஒரே குழியில் வீசப்பட்ட 8 உடல்கள்; அதிர்ச்சியை ஏற்படுத்திய கர்நாடக வீடியோ

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

பெங்களூரு: கொரோனாவால் பாதிப்படைப்பவர்கள் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று மட்டும் 507 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,893 ஆக அதிகரித்துள்ளது.



latest tamil news




இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை சுகாதாரத்துறை ஊழியர்கள் அலட்சியமாகக் கையாள்வது தொடர்பாகப் பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
இன்று, கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தின் ஒரு பகுதியில், கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை வண்டியிலிருந்து எடுத்து வந்து, பெரிய குழி ஒன்றுக்குள் அலட்சியமாக வீசி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. கறுப்புநிற பை ஒன்றில் அந்த உடல்கள் இருப்பதையும் ஒரேகுழியில் எட்டுக்கும் மேற்பட்ட உடல்கள் தள்ளப்படுவதையும் அந்த வீடியோ காட்டுகிறது.




இதுகுறித்து பெல்லாரி மாவட்ட துணை ஆணையர் எஸ்.எஸ்.நகுல் கூறுகையில், 'இந்த வீடியோ தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த வீடியோவில் உடல்கள் சரியாக பேக் செய்யப்பட்டுள்ளன. ஆனால், மனிதாபிமான அடிப்படையில் அடக்கம் செய்யவில்லை. மனிதாபிமான அடிப்படையில் ஊழியர்கள் செயல்படவில்லை. தனித்தனியாக உடல்களை அடக்கம் செய்திருக்க வேண்டும். இதுதொடர்பாக விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.


latest tamil news



கர்நாடக முதல்வர் எடியூரப்பா, 'ஊழியர்கள் நடந்துகொண்ட விதம்மனிதாபிமானமற்றது மற்றும் வேதனைக்குறியது' எனக் கூறியுள்ளார். உடல்களை அவமதிக்கும் வகையில் கையாண்ட ஊழியர்களை மாற்றி புதிதாக ஊழியர்கள் நியமிக்க வேண்டும். இறந்தவர்களின் உறவினர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஜூலை-202000:22:03 IST Report Abuse
தல புராணம் //உடல்களை அவமதிக்கும் வகையில் கையாண்ட ஊழியர்களை மாற்றி புதிதாக ஊழியர்கள் நியமிக்க வேண்டும்// வார்த்தைகளை படித்தால் அவர்கள் தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள்ன்னு புரியுது.. கட்டிங் வாங்கியாச்சி, அதனாலே ஒப்பந்தத்தை மாத்தி வேற நிறுவனத்தை போட முடியாது..
Rate this:
Cancel
Paramasivam - Chennai,இந்தியா
01-ஜூலை-202019:36:44 IST Report Abuse
Paramasivam ஒரே குழியில் புதைத்தால் என்ன ? தனித்தனி குழியில் புதைத்தால் என்ன? எப்படியும் மக்கி மண்ணாக போகப்போகுது
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
02-ஜூலை-202000:23:31 IST Report Abuse
தல புராணம்பாவம் உன்னை பெத்ததுங்க.. அவங்களுக்காக நான் வருத்தப்படுறேன்.....
Rate this:
Cancel
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
01-ஜூலை-202018:41:36 IST Report Abuse
padma rajan ஒன்றும் விளங்கவில்லை. இதையெல்லாம் எப்படி யார் படம் பிடிக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்தே படம்பிடித்து வெளியிடுகிறார்களா அல்லது ஆம்புலன்ஸ் டிரைவர் படம் பிடித்து இருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X