பொது செய்தி

இந்தியா

நாளை மறுநாள் லடாக் செல்கிறார் ராஜ்நாத்சிங்

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Rajnath Singh, Ladakh, Defence Minister, Rajnath, visit Ladakh, Sources, ராஜ்நாத், லடாக், பயணம், ராணுவம், நரவனே,

புதுடில்லி: இந்தியா- சீனா இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் லடாக்கில் தற்போது நிலவும் சூழல் குறித்து நேரில் ஆய்வு செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை மறுநாள் (ஜூலை 3) லடாக் செல்கிறார்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள எல்லைப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில் 35க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் பலியானதாக கூறப்படுகிறது. இதனால், இந்திய-சீன எல்லை முழுவதும் போர் பதற்றம் நிலவி வருகிறது. பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இருதரப்பு ராணுவமும் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன.


latest tamil news


பேச்சுவார்த்தையில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டு, எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை திரும்ப பெறுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி எல்லையில் படை விலக்கலுக்கான நடவடிக்கைகளை இருதரப்பும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே ராணுவ கமாண்டர்கள் அளவிலான மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடந்தாலும், எல்லை முழுவதும் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜூலை 3ம் தேதி லடாக் செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் ராணுவ தளபதி முகுந்த நரவனேவும் செல்கிறார். லே பகுதிக்கு செல்லும் அவர்கள் அங்கு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X