சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

அறிவியல் ஆயிரம்

பழங்களில் பிளாஸ்டிக்


நாம் பயன்படுத்தி துாக்கி எறியும் பாலீத்தின் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறது. தற்போது கேரட், ஆப்பிள், பேரிக்காய், முள்ளங்கி, டர்னிப், புரக்கோலி, கீரை போன்ற காய்கறி மற்றும் பழங்களிலும் பிளாஸ்டிக் நுண் துகள்கள் காணப்படுவதாக இத்தாலியில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவைகளின் வேர் பகுதிகள் மூலம் இந்த பிளாஸ்டிக் நுண் துகள்கள் நுழைந்து, அது காய்கறி மற்றும் பழங்களில் வருகிறது. ஏற்கனவே கறி மற்றும் மீன்களிலும் பிளாஸ்டிக் நுண் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

தகவல் சுரங்கம்

நீளமான ஏரி


கேரளாவில் உள்ள வேம்பநாடு ஏரி, இந்தியாவின் நீளமான ஏரி என அழைக்கப்படுகிறது. இதன் பரப்பளவு 2114 சதுர கி.மீ. ஆழப்புலா, கோட்டையம் மற்றும் கொச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த ஏரி பரவி உள்ளது. இந்த ஏரியில் 'நேரு படகு போட்டி' ஆண்டுதோறும் நடக்கிறது. இதன் அதிகபட்ச நீளம் 96.5 கி.மீ. அதிகபட்ச அகலம் 14 கி.மீ. அதிகபட்ச ஆழம் 39 அடி. இந்த ஏரியில் பதிரமானல், பெரும்பாலம், பல்லிபுரம் போன்ற தீவுகள் உள்ளன. இதில் உள்ள படகு வீடுகள், சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கிறது. பெரியாறு, பம்பா, மீனச்சில் போன்ற ஆறுகள் இதில் கலக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X