தெலுங்கானாவில் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை அதிகரிப்பு

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா தொற்றுக்கான தினசரி பரிசோதனைகளை 6000 ஆக உயர்த்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த வேண்டுமெனில் முதலில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். அதன்மூலமாகவே, பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சையளித்து நோயை குணப்படுத்த முடியும். இதனையே அரசு வலியுறுத்தி வருகிறது. தெலுங்கானா உட்பட பல மாநிலங்களில் குறைந்த அளவிலான பரிசோதனை (ஒரு நாளில்) நடத்தப்படுவதாக பல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் தெலுங்கானாவில் தற்காலிகமாக 2 நாட்கள் மாதிரிகள் சோதனையை மாநில அரசு நிறுத்தி வைத்தது.


latest tamil news



தெலுங்கானாவில், பாதிப்புகள் அதிகரித்து, தினமும், எண்ணற்றவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு வருகிறது. ஆனால் பல்வேறு காரணங்களால் ஆயிரக்கணக்கான மாதிரிகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன. இதற்கான சில நடவடிக்கைகளை தொடர்ந்து தற்போது மீண்டும் நோய் சந்தேகத்திற்குரியவர்களை பரிசோதனை செய்ய தெலுங்கானா அரசு தயாராகி விட்டது. அதன்படி, தினசரி மாதிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டே செல்கிறது. முதலில் 300 க்கும் குறைவாக நடத்தப்பட்ட மாதிரிகள் சேகரிப்பை அதிகரித்து, கடந்த வாரத்தில் 2500 - 3000 சோதனைகளை நடத்தியது. மேலும் அரசு ஆய்வகங்களில் உள்ள திறன்கள் மற்றும் பணிச்சுமை , சோதனையின் தன்மைகள், பிரச்னைகள் நெறிப்படுத்தப்பட்டால் ஒரு நாளைக்கு சோதனை செய்யப்படும் மாதிரிகளின் எண்ணிக்கை 6000 ஐ தொடும்.


latest tamil news



முறையான திட்டமிடல் மற்றும் மாவட்டங்களில் சோதனை மையங்களை அதிகப்படுத்துதல் போன்றவற்றால் மாநிலத்தில் ஒரு நாளைக்கான சோதனை திறனை 10,000 ஆக உயர்த்த முடியும் என தொற்று நோயியல் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். காய்ச்சல் மருத்துவ மனை மற்றும் தடுப்பு மருத்துவ கழகம் (Institute of Preventive Medicine (IPM)) நாளொன்றிற்கு 2400 மாதிரிகளை பரிசோதிக்கிறது. இந்த மருத்துவமனையில் ஆர்டி பிசிஆர் பரிசோதனை கருவிகளும் உள்ளன. மாநிலத்தில் உஸ்மானியா போன்ற மருத்துவ கல்லூரியிலும் பரிசோதனைகளை அதிகரிக்க நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X