பொது செய்தி

இந்தியா

பதஞ்சலியின் 'கொரோனில்' ஆயுர்வேத மருந்துக்கு மத்திய அரசு அனுமதி

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
patanjali, coronil, Ayush Ministry, orona cases worldwide, corona crisis, covid 19 pandemic, medicine, பதஞ்சலி, கொரோனில், மருந்து, மத்திய அரசு அனுமதி

புதுடில்லி: பதஞ்சலி நிறுவனத்தின் 'கொரோனில்' ஆயுர்வேத மருந்துக்கு மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

கடந்த மாதம் 22ம் தேதி பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் அறிமுகப்படுத்திய 'கொரோனில்' என்ற மருந்து குறித்து மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் பல கேள்விகளை எழுப்பியது. அதே நேரம் அதை விளம்பரம் செய்யவும் தடை விதித்தது. இந்நிலையில் கொரோனில் மருந்து கொரோனாவை குணமாக்கும் என்று சொல்லவில்லை என்றும், கொரோனா நோயாளிகள் அதை எடுத்துக் கொண்ட போது, அவர்களுக்கு குணம் கிடைத்தது என்றும் பதஞ்சலி நிறுவனம் நேற்று விளக்கம் அளித்தது.


latest tamil newsஇதையடுத்து அந்நிறுவனத்தின் 'கொரோனில்' மருந்தினை நோய் எதிர்ப்பு சக்தி ஊக்க மருந்தாக மட்டும் விற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் இது கொரோனாவை குணமாக்கும் மருந்து என கூறி விற்பனை செய்யக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
02-ஜூலை-202006:54:31 IST Report Abuse
Nathan கார்ப்பரேட்டுகள் கத்தி கலங்கி நிற்குமே. நேற்று பண்டர்பூரில் வருடாந்திர வழக்கமாக சாமி கும்பிட்ட மகா சீஏம் , ஏதாவது மாயம் செய்து காண்பி என வேண்டியதாக செய்தி. பதஞ்சலி மருந்தை உள்ளெ வரவிட மாட்டேன் என சூல் முன்னர், விட்டிட்டிருந்தார். இப்போ பம்பாய் பிழைக்க பல்டி அடிப்பாரோ.
Rate this:
Cancel
chandkec - singapore,சிங்கப்பூர்
02-ஜூலை-202005:45:55 IST Report Abuse
chandkec நேற்று தடை. இன்று அனுமதி. ஒண்ணுமே புரியலே. ...இது தான் மோடிமஸ்தான் வேலை என்பதோ .....
Rate this:
Nathan - Hyderabad,இந்தியா
02-ஜூலை-202013:08:35 IST Report Abuse
NathanAyush ministry has one foreign element, which is trying at it's best to stop this. Now koronil name is to be changed, it said. Patanjali shohuld not market it for korona, it said, but as a resistivitu medicine. Big villaneous laugh for it....
Rate this:
Cancel
02-ஜூலை-202005:34:42 IST Report Abuse
ஆப்பு அதே டெக்னிக்தான். குணமானா எங்க மருந்து. ஆகலைன்னா நேருவோட சதி...
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
02-ஜூலை-202017:02:37 IST Report Abuse
Chowkidar NandaIndiaநம்ம வசனமும் அதே தானே. குணமாகாவிட்டால் மோடி ஒழிக. குணமானால் அது ஆதிகாலத்து கான்க்ராஸ் கண்டுபிடிப்பு. அப்படித்தானே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X