நேபாள பிரதமர் ஷர்மா ஒலிக்கு 'திடீர்' நெஞ்சு வலி

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

காத்மாண்டு: திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேபாள பிரதமர் கே.பி ஷர்மா ஒலி சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளார்.



latest tamil news



அண்டை நாடான நேபாளம், சமீபகாலமாக இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. சீனாவுடன் நெருக்கம் காட்டும், நேபாள அரசு, இந்தியாவின் காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா பகுதிகளுக்கு உரிமம் கொண்டாடி வரைபட மாற்ற சட்ட மசோதாவையும் பார்லி.,யில் நிறைவேற்றியது. செயற்கையாக தனது நிலப்பரப்பை விஸ்தரிக்க நேபாளம் முயற்சிப்பதாக இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிறன்று பிரதமர் பதவியில் இருந்து தன்னை நீக்க, அன்னிய நாடுகள் சதித்திட்டம் தீட்டுகிறது என நேபாள பிரதமர் சர்மா ஒலி இந்தியாவை மறைமுகமாக குறிப்பிட்டு ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதனிடையே, ஆளும் கட்சியான நேபாள கம்யூ., கட்சியின் நிலைக் குழு கூட்டம் பலுவடாரில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நேற்று (ஜூன் 30) நடைபெற்றது. அதில், பிரதமர் கே.பி ஷர்மா ஒலியின் கருத்து அரசியல் ரீதியாக சரியானது அல்ல, ராஜதந்திர ரீதியானது அல்ல. இதுபோன்ற பிரதமரின் அறிக்கை, அண்டை நாடுகளுடான உறவில் சேதத்தை ஏற்படுத்துமென முன்னாள் பிரதமரான புஷ்பா கமல் தஹால் பிரசண்டா தெரிவித்துள்ளார். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், நேபாள அரசுக்கும் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லையெனவும், தன்னிச்சையாக செயல்படுவதாக அவர் கூறியுள்ளார்.


latest tamil news



பிரசாண்டாவை தவிர, மற்ற மூத்த தலைவர்களான மாதவ் குமார் நேபாள், ஜலநாத் கானால், பாம்தேவ் கவுதம் மற்றும் நாராயங்காஜி ஸ்ரேஸ்தா ஆகியோரும், ஷர்மா ஒலி இந்தியாவுக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் அல்லது அவரது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். கே.பி., ஷர்மா ஒலி பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டுமென ஆளும் கட்சியை சேர்ந்த 57 உறுப்பினர்களே நெருக்கடி அளித்து வரும் நிலையில், நேபாளத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படலாமென எதிர்ப்பார்க்கப் படுகிறது. பிரதமர் கே.பி.,ஷர்மா ஒலி பரிசோதனைக்கு பின் காத்மாண்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக நேபாள பிரதமரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Covaxin - Bharat Hindustan,இந்தியா
04-ஜூலை-202019:07:13 IST Report Abuse
Covaxin நேபாள கட்டுமரம்...??
Rate this:
Cancel
CSCSCS - CHENNAI,இந்தியா
02-ஜூலை-202008:06:02 IST Report Abuse
CSCSCS என்னமா நடிக்கிறது இந்த சாத்தான் . அடுத்து வேறு வலி வரும் .
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
02-ஜூலை-202006:07:31 IST Report Abuse
Indhuindian இந்தியா வேணாம் ஆனா இந்திய அரசியல் வாதிகளின் தந்திரம் மட்டும் வேணுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X