மஹா.,வில் கொரோனாவுக்கு 60 போலீசார் பலி

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

மும்பை : மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்றுக்கு பலியான போலீசாரின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவின் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹா.,முன்னிலையில் உள்ளது. அங்கு கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்திற்கும் மேல் உள்ளது. மாநிலத்தில் நோய் தொற்று காரணமாக பணியில் ஈடுபட்ட போலீசாரும் பாதிக்கப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 77 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் நோய் தொற்றுக்கு இதுவரை 60 போலீசார் மஹா.,வில் உயிரிழந்துள்ளதாகவும், 1,065 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


latest tamil news



பலியான போலீசாரில் 38 பேர், மும்பை நகரத்தை சேர்ந்த போலீசார் என்பது தெரிய வந்துள்ளது. நாட்டின் மொத்த கொரோனா பாதிப்புகளில் மஹா., மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளது. இதுவரை 2,600 க்கும் மேற்பட்டவர்கள் உட்பட மும்பை போலீசிலும் சேர்த்து 4,900 பேர் பாதிக்கப்பட்டனர். மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) 82 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டனர். இதனால் 3,700 க்கும் மேற்பட்ட போலீசார் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது மாநில போலீஸ் படையில், செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 1,015 ஆக உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X