திருப்பூரில்10 பேருக்கு தொற்று: பாதிப்பு 188 ஆக உயர்வு
திருப்பூர் மாவட்டத்தில், 12 வயது சிறுவன், 85 வயது மூதாட்டி உட்பட, 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு, 180 ஆக இருந்தது. வெளிமாவட்டத்தில் இருந்து வந்த இருவர், அந்தந்த மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று, மேலும் 10 பேருக்கு தொற்று இருப்பது நேற்று தெரியவந்துள்ளது.
அவிநாசி, வடுகபாளையம் - ராயகவுண்டன்புதுாரை சேர்ந்த, 12 வயது சிறுவன், வீரபாண்டி திரு.வி.க.,நகரை சேர்ந்த 26 வயது ஆண் மற்றும் 23 வயது பெண்; பல்லடம், கணபதிபாளைத்தில், 47 வயது ஆண்; வீரபாண்டி புளியங்காடு பகுதியில், 60 வயது மூதாட்டி உட்பட, 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியாகியுள்ளது.
நேற்றைய நிலவரப்படி, மாவட்டத்தின் மொத்த பாதிப்பு, 188 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 117 பேர் குணமாகிவிட்டனர். மீதியுள்ள, 70 பேர், திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீலகிரியில் தொற்று 107 ஆக அதிகரிப்பு
நீலகிரியில், கொரோனா தொற்று எண்ணிக்கை, 107 ஆக அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், கடந்த இரண்டு வாரங்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று, ஒரே நாளில், 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி, பாதிப்பு எண்ணிக்கை, 107 ஆக அதிகரித்தது. 70க்கு மேற்பட்ட இடங்களில், 7,000 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதாரத் துறையினர், தொற்று ஏற்பட்டவர்களுடன், தொடர்பில் இருந்த பலரை பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். அங்கு, கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு சக்திக்கான வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE