பொது செய்தி

இந்தியா

109 வழித்தடங்களில் தனியார் பயணிகள் ரயில்; ரயில்வே அமைச்சகம் அழைப்பு

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement

புதுடில்லி: நாட்டில் 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில்களை இயக்க தனியார் துறைக்கு ரயில்வே அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.latest tamil newsபயணியர் ரயில் போக்குவரத்தில் ஆண்டிற்கு ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதால், சில வழித்தடங்களில் தனியார் ரயிலை இயக்குவதற்கு அனுமதி வழங்குவது என மத்திய அரசு முடிவு செய்தது. மேலும், ரயிலின் வருவாயை எப்படி பகிர்ந்து கொள்வது என்று ரயில்வே துறை பேசி வந்தது. இதனை தொடர்ந்து இந்தியாவில் முதலாவது தனியார் ரயில், டில்லி - உ.பி.,யின் லக்னோ இடையே இயக்கப்பட்டது.


latest tamil news


இந்நிலையில், நாட்டின் 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில்களை இயக்க தனியார் துறைக்கு, மத்திய ரயில்வே அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. 109 வழித்தடங்களிலும், அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த, 150 ரயில்கள் இயக்கப்படும். தனியார் துறை முதலீடு மூலம், ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் என எதிர்பார்க்கப்படுவதாக, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
02-ஜூலை-202011:14:20 IST Report Abuse
Shaikh Miyakkhan eee
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-ஜூலை-202009:45:42 IST Report Abuse
Lion Drsekar ஏர் செல் கம்பனிபோல் யாருக்கும் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக இழுத்து மூடாமல் நடத்தினால் நன்றாக இருக்கும், மேலும் அரசு என்றால் அது எங்கே இருக்கிறது, யாரைப்பார்க்கவேண்டும் என்று தெரியும் தனியார் என்றால் நூறு என்கொண்ட ஒரு தொலைபேசி இணைப்பை நம்பி வாழவேண்டிய ஒரு நிலை, அலுவலகம் என்று இருக்கிறது, யாரை காணவேண்டும், என்று எதுவுமே தெரியாமல் நாம் எந்த நாட்டில் இருக்கிறோம் என்றே தெரியாமல் இருக்கிறோம், ஒரு சில தனியார் நிறுவனங்கள் குறிப்பாக தற்போது சென்னையில் இயங்கும் தொலைபேசி நிறுவனம் தீயணைப்பு படைபோல் செயலாற்றுகிறார்கள் புகார் கொடுத்த அடுத்து நிமிடமே வந்து சரி செய்வதோடு, வெளிநாட்டு ஊழியர்கள் போல் லஞ்சம் கெட்டிக்காமல் உடனடியாக வளியை சிறப்பாக முடித்து விட்டு செல்கிறார்கள், அதுபோன்று இருந்தால் நல்லது, வந்தே மாதரம்
Rate this:
Cancel
ABDUL MALIK - Manqaf,குவைத்
02-ஜூலை-202009:41:31 IST Report Abuse
ABDUL MALIK அரசு நடத்தினால், நாட்டம் ஏற்பட்டாலும், சேவை நிற்காது. தனியார் வசம் போனால், நாட்டம் ஏற்படும் வழித்தடங்களில், சேவை கிடைக்காது. விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில், டிக்கெட் விலை கணிசமாக உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கும், தனியார் ஊழியர்களுக்கும் நல்ல ஒத்துழைப்பு இருக்காது. சரிதையை வழித்தடம் மற்றும் கிராஸ்ஸிங் முக்கியத்துவம், சில பெரிய தனியார் நிறுவன ரயில்களுக்கு மட்டும் கிடைக்கும். அதனால் அரசு ரயில்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். ரயில்வே ஊழியர்களின் வேலை நிரந்தரமின்றி அலைக்கழிக்கப்படும். சேவை மற்றும் தொழில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. எனவே, சேவை அமைப்புகளை, தனியாரிடம் தரக்கூடாது. அவ்வாறு தரவேண்டும் என முடிவுசெய்து விட்டாள், தயவு செய்து, பாராளுமன்ற செயல்பாட்டையும்,, சட்டமன்ற செயல்பாட்டையும் தனியாரிடம் தாருங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X