பொது செய்தி

தமிழ்நாடு

தந்தை, மகன் மரண வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் சிறையில் அடைப்பு

Updated : ஜூலை 02, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
sathankulam death, SI, arrest, தந்தை, மகன், மரண வழக்கு, எஸ்ஐ, ரகு கணேஷ் ,கைது, Sathankulam, custodial deaths, SI Raghu Ganesh, arrested, thoothukudi, father-son death,

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் தந்தை , மகன் மரண வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கோவில் பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர், ஜெயராஜ், 63, , இவரது மகன் பெனிக்ஸ், 31, கடந்த ஜூன், 19 இரவு, 9:00 மணிக்கு ரோந்து வந்த உள்ளூர் போலீசார், ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, கடையை திறந்து வைத்திருப்பதாகக் கூறி, கடைகளை மூடுமாறு கூறியதில் ஏற்பட்ட வாக்குவாத்தையடுத்து தந்தை, மகன் ஆகியோரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கியுள்ளனர்.


latest tamil news
இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜூன், 22ல் பெனிக்ஸ், மறுநாள் ஜெயராஜ் இறந்தனர். சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.இன்று சாத்தான்குளம் போலீஸ் நிலைய பெண் காவலரிடம் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து எஸ்.ஐ.கள், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார், முருகன், முத்துராஜ் உள்ளிட்ட 6 போலீசார் மீது 4 பிரிவுகளின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். இதில் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டார்.தொடர்ந்து ரகு கணேஷூக்கு தூத்துக்குடியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் கோவில்பட்டி கோர்ட்டில் நீதிபதி பாஸ்கரன் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவருடன் தலைமை காவலர் முருகன் என்பவரும் ஆஜர்படுத்தப்பட்டார்.


எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் தலைமறைவு

தந்தை மகன் மரணவழக்கில் தேடப்பட்டு வரும் எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் தலைமறைவானார். அவரை தேடும்பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Sundaramurthy - Chennai,இந்தியா
02-ஜூலை-202012:18:31 IST Report Abuse
P Sundaramurthy போலீஸ் கவனிப்பில் விசாரணை உண்டா ? சி பி ஐ அண்டார்டிக்காவிலுருந்தா வருகிறார்கள் ? ஏன் தாமதம் ?
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
02-ஜூலை-202012:14:04 IST Report Abuse
Girija Lawrence Ron - நீங்கள் சொல்வது சரி , இந்த சிசிடிவி நிறுவிய நிறுவனமும் விசாரிக்க படவேண்டும், எந்த காரணத்தினால் தினமும் பதிவுகல் ஓவர் ரைட் செய்யும்படி செட்டிங்ஸ் அமைத்தனர்? கடைசியாக அந்த ஸ்டேஷனை ஆய்விசெய்த அதிகாரியின் ஆய்வு செக்லிஸ்ட்டில் சிசிடிவி இருந்ததா? அதை அவர் ஆய்வு செய்து குறிப்பு பதிவு செய்தாரா ? கிட்டத்தட்ட நெய்வேலி பாய்லர் சம்பவம் போல்தான். சேப்டி ஆபீசர் கடைசியாக ஆய்வு செய்தார் ? அடுத்த அல்லது கடந்த மெய்ன்டெனெனஸ் எப்போது நடந்தது அதன் குறிப்புகள் ? என்று செயல்முறைகள் பின்பற்றாததால் இந்த கொடுமை. சாத்தான்குளம் மக்கள் பொது அறிவில் மிகவும் பின்தங்கி அல்லது போலீசை பார்த்து பயந்துநடுங்குபவராக உள்ளனர் ஏனென்றால் ஒருவர் கூட புத்தி கூர்மையாக செயல்பட்டு மாவட்ட கலெக்டர் , எஸ் பி , நீதிபதி , அவசர போலீஸ் 100 - இதில் வரும் அழைப்புகள் சென்னை வந்து பிறகு எஸ் பி க்கு அனுப்பப்படும் விவரத்தை பிரித்து மேயவர், இறந்தவர் குடும்பத்தினர் பெண்கள் காவலன் செய்தியில் பட்டிவிட்ருந்தால் கூட உடனே அவர்களை விடுவித்திருப்பர் . இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் கலெக்டர் , எஸ் பி , மாவட்ட நீதிபதி மொபைல் எண்கள் பொது மக்களுக்கு பகிரப்படவில்லை. திருவண்ணாமலை திருப்பூர் கலெக்டர் மற்றும் அபினவ் எஸ் பி பகிர்ந்துஉள்ளனர் . இதை கட்டாயமாக்க வேண்டும் .
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
02-ஜூலை-202011:47:23 IST Report Abuse
Ram lockupil pottu polakavendiyathuthane
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X