தெலுங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் 945 பேருக்கு கொரோனா பாதிப்பு

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் (நேற்று) 945 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 7 பேர் பலியாகினர் என அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக தெலுங்கானாவில் கடந்த சில தினங்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் தற்போதைய அதிகபட்ச பாதிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) 945 பேருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 16,339 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 7 பேர் பலியாகியுள்ளனர். தெலுங்கானாவில் நோய் தொற்றினால் இதுவரை 260 பேர் பலியாகியுள்ளனர்.


latest tamil news



மாநிலத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில், 869 பேர் ஐதராபாத் நகர பகுதியை (GHMC) சேர்ந்தவர்கள். இதுவரை GHMC யில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 12,541 ஆக உள்ளது. தொடர்ந்து, 29 பேர் ரங்காரெட்டி மாவட்டத்தையும், 13 பேர் மேட்சலையும், 21 பேர் சங்காரெட்டியையும் , 2 பேர் கரீம்நகரையும், 4 பேர் நிர்மல் பகுதியையும், 2 பேர் மஹபூப் நகரையும் மற்றும் கம்மம், சித்திபேட்டை, விக்ராபாத், நிஜாமாபாத் மாவட்டங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டனர். மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 1,712 பேர் குணமடைந்தனர். மொத்தமாக மாநிலத்தில் 7,294 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை மாநிலத்தில் 8,785 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X