தாராவியில் புதிதாக 14 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மும்பை : மஹாராஷ்டிராவின் தாராவியில் கொரோனா தொற்றுக்கு புதிதாக 14 பேர் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது. ஆசியாவின் அதிக குடிசை பகுதிகளை கொண்ட தாராவியில் கொரோனா தொற்று ஏற்ற இறக்கமாக உள்ளது. சில நாட்களாக குறைந்த பாதிப்பு, கடந்த சில தினங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தாராவியில் கொரோனா பாதிப்பு ஏப்., மற்றும் மே., மாதத்தை விட ஜூனில் பாதிப்பு 1.02 சதவீதமாக இருந்ததது. இந்நிலையில் தாராவியில் இன்று புதிதாக 14 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் உறுதியானது. இதனால் தாராவியில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 2,282 ஆக அதிகரித்தது. நேற்று முன்தினம் வரை பலியானவர்களின் எண்ணிக்கை 82 ஆக உள்ளது.


latest tamil news



தாராவியில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 535 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,618 ஆகவும் உள்ளதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-ஜூலை-202004:16:09 IST Report Abuse
J.V. Iyer ஆமாம், அதெப்படி?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X