தமிழ்நாடு

வெளியூர் பயணங்கள் வேண்டாம்: சுப்ரியா சாஹூ 'அட்வைஸ்'

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement

கூடலுார் : கூடலுார், ஸ்ரீ மதுரை ஊராட்சி குங்கூர்மூலா அரசு மேல்நிலை பள்ளியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான கிராம ஊராட்சி அளவிலானவிழிப்புணர்வு குழுக்கூட்டம் நடந்தது.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சிலீமா வரவேற்றார்.

கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி சுப்ரியாசாஹூ பேசுகையில்,''மக்கள், கூட்டமாக கூடுவதையும்; வெளியூர் பயணங்களை தவிர்ப்பதும் நல்லது. கொரோனா பாதுகாப்பு குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.

மாவட்ட கலெக்டர் இன்னசென்ட்திவ்யா தலைமை வகித்து பேசுகையில்,''மக்கள் பிரதிநிதிகள், ஊர் தலைவர்கள் கொரோனா தடுப்பு குறித்து, கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராமங்களுக்குள் புதிதாக வந்து செல்பவர்களின் விபரங்களை பதிவு செய்து, தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.

கூட்டத்தில், எஸ்.பி., சசிமோகன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஸ்ரீமதுரை கிராம ஊராட்சி தலைவர் சுனில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் செந்தில், வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் உட்பட பலர் பங்கேற்றனர். கூடலுார் ஆர்.டி.ஓ., ராஜ்குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X