சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

உயர்ரக மதுபானங்களை வாங்கி குவித்த அதிகாரிகள்!

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement
 உயர்ரக மதுபானங்களை வாங்கி குவித்த அதிகாரிகள்!

உயர் ரக மதுபானங்களை வாங்கி குவித்த அதிகாரிகள்!

''ரொம்ப, 'டீடெய்லா' ஆய்வு பண்றாரு பா...'' என, அண்ணாச்சி வீட்டு முற்றத்தில், அரட்டையை ஆரம்பித்தார், அன்வர்பாய்.
''யாரு, எங்க ஓய் ஆய்வு பண்றா...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''தமிழக மின் வாரியத்துக்கு, மின் கட்டணம், அரசு மானியம்னு, வருஷத்துக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல வருவாய் கிடைக்குது... ஆனா, வரவை விட, செலவு அதிகம்கிறதால, மத்திய நிதி நிறுவனங்கள், வங்கிகளிடம், பல நுாறு கோடி ரூபாய் கடன் வாங்குறாங்க பா...
''அதே நேரம், இங்கே நிறைய முறைகேடுகளும் நடக்குது... சமீபத்துல, வாரியத்தின் தலைவரா, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, பங்கஜ்குமார் பன்சால் நியமிக்கப்பட்டாரு பா...
''இன்ஜினியரிங் படிச்சிருக்கிற இவர், மின் உற்பத்தி, மின் வினியோகம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகள்லயும் நடக்கிற பணிகள் சம்பந்தமா, டீடெய்லா ஆய்வு செய்றாரு...
''விஷயம் தெரிஞ்ச அவரை, யாரும் ஏமாத்திட முடியாது... அதனால, 'முறைகேடு அதிகாரிகளை கண்டுபிடிச்சு, நடவடிக்கை எடுத்து, வாரியத்தை லாப பாதைக்கு திருப்பணும்'னு நேர்மையான ஊழியர்கள் சொல்றாங்க பா...'' என்றார்,
அன்வர்பாய்.
''கூடுதல் நிதி தந்தா நல்லாயிருக்கும்னு சொல்றாங்க...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார்,
அந்தோணிசாமி.
''எல்லாரும் தான் நிதி நெருக்கடியில இருக்கா... நீரு யாரைச் சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''மதுரையில கொரோனா பரவல் வேகம் எடுத்துட்டு இருக்குல்லா... இதனால, சென்னையில இருந்து வர்றவங்களை கூட, தனிமை முகாம்கள்ல தங்க
வச்சிடுறாங்க...''இதுக்காக, ஒத்தக்கடை வேளாண்மை கல்லுாரி, ஆஸ்டின்பட்டி உட்பட பல இடங்கள்ல, தனிமை முகாம்களை ஏற்படுத்தி இருக்காங்க... இங்க தங்குறவங்களுக்கு, மூணு வேளை சாப்பாடு உள்ளிட்ட வசதிகளை செய்து குடுத்து
இருக்காங்க...
''இதுக்கெல்லாம் ஏகப்பட்ட பணம் செலவாகுதுங்க... அதனால, 'மதுரைக்கு கூடுதல் நிதி ஒதுக்கணும்'னு, உள்ளூர் அமைச்சர்கள் ராஜு, உதயகுமார் மூலமா, மாவட்ட நிர்வாகம் தரப்புல, அரசுக்கு கோரிக்கை வச்சிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''பிரீமியம் ரக மதுபானங்களை, தலையில கட்டச் சொல்றா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு தாவினார், குப்பண்ணா.
''எந்த ஊர்லங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''டாஸ்மாக் கடைகள்ல, சாதாரணம், நடுத்தரம், உயர் ரகம்னு மூணு விதமான மதுபானங்களை விக்கறா... அதுக்கேத்த மாதிரி தான் விலையும் இருக்கும்...
''பெரும்பாலும், சாதாரண, நடுத்தர ரகங்கள் தான் அதிகமா விற்பனையாகும்... இதை தான், அதிகாரிகளும் அதிகமா கொள்முதல் பண்ணி, கடைகளுக்கு அனுப்புவா ஓய்...
''ஆனா, கடலுார் மாவட்டத்துல மட்டும், உயர் ரகமான பிரீமியம் மதுபானங்களை, டாஸ்மாக் அதிகாரிகள், அதிகமா கொள்முதல் பண்ணியிருக்கா... மாவட்டம் முழுக்க, 40 ஆயிரம் பெட்டிகளுக்கு மேல, பிரீமியம் மது, 'ஸ்டாக்' இருக்கு ஓய்...
''இதை, 'குடி'மகன்கள் தலையில கட்டுங்கோன்னு, ஊழியர்களுக்கு நெருக்கடி தரா... இந்த கொள்முதல்ல, மண்டல, மாவட்ட அதிகாரிகளுக்கு நிறைய, 'பிரதிபலன்' கிடைச்சிருக்கறதா ஊழியர்கள் புலம்பறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
அரட்டை முடிய, ஜமா கலைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X