வாஷிங்டன்: சீனாவின் ஹூவேய் மற்றும் ZTE ஆகிய நிறுவனங்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் அதற்கான நிதி வழங்குதல் நிறுத்தப்படுவதாக அமெரிக்க நிதி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த இரு நிறுவனங்களின் சப்ளைகளுக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்த இரு தொலைத் தொடர்பு நிறுவனங்களும் சீன ராணுவம் மற்றும் உளவுத்துறையுடன் தொடர்பில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தொலைத் தொடர்புகளை கட்டுப்படுத்தும் பெடரல் கம்யூனிகேசன் கமிஷன் என்ற அமைப்பு அமெரிக்காவின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த இரு நிறுவனங்களுக்கும் அமெரிக்காவின் தொலைத் தொடர்புக்கான நிதியை நிறுத்துவதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது..

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE